பிரதமர் அலுவலகம்
மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
19 AUG 2025 11:54AM by PIB Chennai
மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார். திரிபுராவின் வளர்ச்சிக்கான அவரது சிறப்புமிக்க முயற்சிகளுக்காக மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் அவர்கள் போற்றப்படுகின்றார் என்றும் பொதுச்சேவை, ஏழை மக்கள் அதிகாரம் பெறுவதில் அவருக்கு இருந்த உறுதி, சமூக மேம்பாட்டிற்கான அவரது அர்பணிப்பு ஆகியன நமக்கு பெரிதும் ஊக்கம் அளிப்பவையாக உள்ளன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
”மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். திரிபுராவின் வளர்ச்சிக்கான அவரது சிறப்புமிக்க முயற்சிகளுக்காக அவர் போற்றப்படுகின்றார். பொதுச்சேவை, ஏழை மக்கள் அதிகாரம் பெறுவதில் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது அர்பணிப்பு ஆகியன நமக்கு பெரிதும் ஊக்கம் அளிப்பவையாக உள்ளன. அவருடைய தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதில் மத்திய அரசும் திரிபுரா அரசும் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றன”.
***
(Release ID: 2157790)
AD/TS/KR
(रिलीज़ आईडी: 2157892)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam