குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எளிதாக வர்த்தகம் செய்வதற்கு உதவும் உத்யம் தளத்தில் 6.63 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்

प्रविष्टि तिथि: 18 AUG 2025 2:49PM by PIB Chennai

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை ஊக்குவிக்கவும், அதன் மேம்பாட்டிற்காகவும், மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எளிதாக வர்த்தகம் செய்வதற்காக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக உத்யம் பதிவு 01.07.2020 அன்று தொடங்கியது.

முக்கியத்துறைக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனளிக்கும் வகையில் முறைசாரா குறு நிறுவனங்களை முறையான வரம்பிற்குள் கொண்டுவர உத்யம் உதவி தளம் தொடங்கப்பட்டது.

2.7.2021 முதல் சில்லறை மற்றும் மொத்த வணிகர்கள் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினராக சேர்க்கப்பட்டனர்.

குறு சிறு நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி கூடுதல் கடன் வழங்கவும், வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் ரூ. 9,000 கோடி நிதியுடன் கடன் உத்தரவாதத் திட்டம் புதுப்பிக்கப்பட்டது.

18 தொழில்களில் ஈடுபட்டுள்ள பாரம்பரிய கைவினைஞர்களுக்கு முழுமையான பயன்களை வழங்குவதற்காக 17.09.2023 அன்று பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது.

உத்யம் பதிவுத்தளம் மற்றும் உத்யம் உதவி தளத்தில் பதிவு செய்த  குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 6.63 கோடியாக இருந்தது. (01.07.2020-31.07.2025)

இத்தகவலை  குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவன இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157443

***

SS/IR/AG/KR

 


(रिलीज़ आईडी: 2157459) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Telugu , Kannada