பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு திரு சி பி ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயகக் கூட்டணி பரிந்துரைத்ததற்கு பிரதமர் வரவேற்பு

Posted On: 17 AUG 2025 8:54PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர்  வேட்பாளராக திரு சி பி ராதாகிருஷ்ணனை பரிந்துரைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முடிவை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது :

 

 

திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில்  அடிமட்ட  நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 

 

நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவரது நாடாளுமன்ற குறுக்கீடுகள் எப்போதுமே கூர்மையாக இருந்துள்ளன. ஆளுநராக அவர் பதவி வகித்த போது, சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தினார். சட்டமன்ற மற்றும் அரசியலமைப்பு சார்ந்த விஷயங்களில் அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருப்பதை இந்த அனுபவங்கள் உறுதி செய்தன. குடியரசு துணைத் தலைவராக அவர் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பார்  என்று நான் நம்புகிறேன்.

***

(Release ID: 2157328)

AD/BR/KR


(Release ID: 2157370)