தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மொபைல் பயன்படுத்துபவர்களுக்கான நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேமை பி.எஸ்.என்.எல். செயல்படுத்துகின்றது-எஸ்.எம்.எஸ்.சி-ல் கேடு நோக்கம் கொண்ட இணைப்புகள் அனுப்படுவதற்கு முன்பே தடுக்கப்படுகின்றன
Posted On:
14 AUG 2025 1:49PM by PIB Chennai
பி.எஸ்.என்.எல். இன்று மொபைல் பயன்படுத்துபவர்களுக்காக நாடு முழுவதும் தனது நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேம் மற்றும் ஆன்ட்டி-ஸ்மிஷிங் பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது-இதற்காக எந்த செயலியையும் நிறுவ வேண்டியதில்லை, கைபேசியின் அமைப்புகளை மாற்றத் தேவையில்லை. எஸ்.எம்.எஸ்-இல் உள்ள சந்தேகத்துக்கிடமான மற்றும் பிஷிங் யு.ஆர்.எல்.-கள் நிகழ்நேரத்தில் கண்டறியப்பட்டு நெட்வொர்க் நிலையிலேயே தடுக்கப்பட்டுவிடும். ஆகவே பி.எஸ்.என்.எல்.பயனாளர்களுக்கு சந்தேகத்துக்கிடமான இணைப்புகள் விநியோகிக்கப்பட மாட்டாது. ஆனால் அதே சமயம் சட்டப்பூர்வமான ஓடிபி-க்கள், வங்கி எச்சரிக்கைகள் மற்றும் அரசு செய்திகள் ஆகியன டிராய் டி.எல்.டீ/யு.சி.சி. சட்டகவரைவில் தொடர்ந்து விநியோகிக்கப்படும். இந்தத் தீர்வு இந்தியா மொபைல் மாநாடு 2024-இல் பரிசோதிக்கப்பட்டு இப்போது பி.எஸ்.என்.எல். வட்டாரங்க்ள் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டான்லா என்கின்ற இந்தியாவில் இயங்கும் முன்னணி கிளவுட் தொடர்பியல் பிளாட்ஃபார்முடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பானது ஏஐ/எம்.எல்/என்.எல்.பி ஆகியவற்றை இணைத்து தொழிலக பிளாக்செயின் டி.எல்.டி உடன் ஒத்திசைந்து செயல்படுகின்றது. இந்த டி.எல்.டி. ஏற்கனவே இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களால் தேவையற்ற வர்த்தக தகவல் தொடர்புகளை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. குறுஞ்செய்தி மூலம் ஏமாற்றுதல் என்கின்ற ஸ்மிஷிங் என்பதற்கு எதிராக இந்த தொழில் நுட்பம் 99% திறன் கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்பாம் தடுப்பில் முக்கிய அம்சங்கள்:
• தினசரி 1.5 மில்லியன் ஸ்கேம்களைக் கண்டறிகின்றது
• மாதந்தோறும் 35,000+ பிரத்யேகமான மோசடி இணைப்புகளையும் 60,000 ஸ்கேம் வாட்ஸ்-அப் மற்றும் மொபைல் எண்களையும் அடையாளம் காண்கின்றது
• தன்னுரிமை பெற்ற நான்கு ஏ.ஐ/எம்.எல் எஞ்சின்கள், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் ஆழ்கற்றலால் இயக்கப்படுகின்றது.
நீங்கள் பி,எஸ்,என்,எல். வாடிக்கையாளராக இருந்தால் கேடு நோக்கமுடைய இணைப்புகள் விநியோகத்தின்போதே தடுக்கப்பட்டுவிடும். இதனால் நம்பகமான தகவல்கள் திருடப்படுவதும் மற்றும் பணம் மோசடிகளுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படும். அனைத்து பி.எஸ்.என்.எல். மொபைல் சந்தாதாரர்களுக்கும் இந்த பாதுகாப்பு தானாகவே செயல்பாட்டில் இருக்கும்.
கூடுதல் விவரங்களுக்கு 1800-180-1503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது www.bsnl.co.in என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.
***
(Release ID: 2156323)
SS/TS/DL
(Release ID: 2156532)