குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அமிர்த தோட்ட கோடைகால ஆண்டு விழா 2025-ன் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 14 AUG 2025 4:26PM by PIB Chennai

அமிர்த தோட்ட கோடைகால ஆண்டு விழா, 2025-ன் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 14, 2025) பங்கேற்றார்.

இந்த அமிர்த தோட்டம் 2025 ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14 வரை பொதுமக்களின் பார்வைக்காக காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். பராமரிப்புக்காக அனைத்து திங்கட்கிழமைகளிலும் தோட்டம் மூடப்படும்.

தோட்டத்தை பார்வையிட பதிவு செய்வது கட்டாயமாகும். இதை கட்டணமின்றி பார்வையிடலாம். பார்வையாளர்கள் தங்களது வருகை குறித்து  குடியரசுத் தலைவர் மாளிகையின் இணைய தளமான (https://visit.rashtrapatibhavan.gov.in)-ல் முன்பதிவு செய்யலாம். 

பார்வையாளர்கள் மொபைல் போன்கள், மின்னணு சாவிகள், பணப்பைகள், கைப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், குழந்தை பால் பாட்டில்கள், குடைகள் ஆகியவற்றை தோட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம். இவற்றைத் தவிர, வேறு எந்தப் பொருட்களும் அனுமதிக்கப்படமாட்டாது.

***

(Release ID: 2156398)

SS/IR/AG/RJ/DL


(Release ID: 2156512)