கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய துறைமுகங்கள் மசோதா 2025, மக்களவையில் நிறைவேறியது
Posted On:
12 AUG 2025 4:17PM by PIB Chennai
இந்திய துறைமுகங்கள் மசோதா 2025 மக்களவையில் நிறைவேறியது ஒரு புதிய இது இந்தியாவின் கடல்சார் எதிர்காலத்திற்கான சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தச் சட்டம் இந்தியாவின் துறைமுக நிர்வாகத்தை நவீனப்படுத்தும். வர்த்தக செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் உலகளாவிய கடல்சார் தலைமைத்துவமாக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தும் காலனித்துவ கால விதிமுறைகளை மாற்றியமைத்து இந்த மசோதா பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு உலகத்தரம் வாய்ந்த கடல்சார் துறை என்ற தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்று ? மசோதாவை தாக்கல் செய்து பேசிய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
இந்த மசோதா 1908-ம் ஆண்டு இந்திய துறைமுகச் சட்டத்தின் காலாவதியான மற்றும் சமகால விதிகளை நவீன விதிமுறைகளுடன் மாற்றுகிறது. வணிகம் செய்வதை எளிதாக்கவும் மேம்படுத்தவும் துறைமுக நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் செயல்பாடுகளை மின்னணுமயமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது நிலையான துறைமுக மேம்பாட்டிற்கான பசுமை முயற்சிகள் மாசு கட்டுப்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளடக்கிய நெறிமுறைகளை நிலைத்தன்மையையும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது மேலும் அனைத்து இந்திய துறைமுகங்களிலும் சீரான பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் திட்டமிடலை உறுதி செய்யும் அதே வேளையில் வெளிப்படையான கட்டணக் கொள்கைகள் மற்றும் சிறந்த முதலீட்டு கட்டமைப்புகள் மூலம் துறைமுக போட்டித்தன்மையை மேம்படுத்த இது முயற்சிக்கிறது. இந்திய துறைமுக மசோதா 2025, சரக்கு இயக்கத்தை விரைவுபடுத்துவதன் மூலமும் இணைப்பை மேம்படுத்துவதன் மூலமும் தளவாடச் செலவுகளைக் குறைக்கும் இந்த மசோதா துறைமுக செயல்பாடுகள், தளவாடங்கள், கிடங்கு அதனுடன் தொடர்புடைய தொழில்களில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் : https://www.pib.gov.in/Press ReleasePage.aspx?PRID=2155540
***
(Release ID: 2155540)
AD/IR/SG/RJ/DL
(Release ID: 2155775)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Odia
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam