மத்திய அமைச்சரவை
தொழில்நுட்பக் கல்வியில் பலதுறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.4200 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
08 AUG 2025 4:04PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 175 பொறியியல் நிறுவனங்கள் மற்றும் 100 பாலிடெக்னிக் கல்லூரிகளை உள்ளடக்கிய 275 தொழில்நுட்ப நிறுவனங்களில் 'தொழில்நுட்பக் கல்வியில் பலதுறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு' திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-உடன் இணைக்கப்பட்ட தலையீடுகளை செயல்படுத்துவதன் மூலம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய தொழில்நுட்பக் கல்வியில் தரம், சமத்துவம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இது 2025-26 முதல் 2029-30 வரையிலான காலத்திற்கு ரூ.4200 கோடி மொத்த நிதிச் சுமையுடன் கூடிய 'மத்தியத் துறைத் திட்டம்' ஆகும். ரூ.4200 கோடியில், உலக வங்கியிலிருந்து ரூ.2100 கோடி கடனாக, வெளிப்புற உதவியாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 275 அரசு/அரசு உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆதரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், மாநிலப் பொறியியல் நிறுவனங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இணைப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ஆகியவை அடங்கும். இது தவிர, தொழில்நுட்பக் கல்வித் துறையைக் கையாளும் மாநில/யூனியன் பிரதேசத் துறைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரிக்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.
இந்த முயற்சி, விரிவான, பன்முக அணுகுமுறை மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல், தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை புதுப்பித்தல், ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைத்தல், ஆராய்ச்சி மையங்களை அமைத்தல் ஆகியவை முக்கியத் தலையீடுகளில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் புதிய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இது அதிக வேலைவாய்ப்பு விகிதங்களுக்கு வழிவகுப்பதுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொறியியல் மாணவர்களிடையே வேலையின்மையைக் குறைக்க உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154119
******
SMB/DL
(Release ID: 2154362)