தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025

அறிவிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Posted On: 07 AUG 2025 2:20PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952-ன் பிரிவு 4-ன் துணைப் பிரிவுகள் (4) மற்றும் (1) இன் கீழ், தேர்தல் ஆணையம் 07.08.2025 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், அதன் பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் மற்றும் வாக்களிப்பு தேதி (தேவைப்பட்டால்) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இந்த அறிவிக்கை இன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, மாநில அரசிதழ்களில் அவற்றின் அதிகாரப்பூர்வ மொழிகளில் மீண்டும் வெளியிடப்படுகிறது.

மேற்படி அறிவிக்கை மற்றும் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, 2025 ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அலுவலரும், மாநிலங்களவை தலைமைச் செயலாளரும், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் விதிகள், 1974-ன் விதி 3-ன் கீழ், மேற்படி விதிகளுடன் இணைக்கப்பட்ட படிவம் 1-ல், இந்திய அரசிதழில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர், இது மாநில அரசிதழ்களில் அவற்றின் அதிகாரப்பூர்வ மொழிகளிலும் மீண்டும் வெளியிடப்படுகிறது.

பொது அறிவிப்பில் பின்வரும் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:

வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் / உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கும் இடம்: தேர்தல் அதிகாரி அலுவலகம், அறை எண். RS-28, முதல் தளம், நாடாளுமன்றம், புது தில்லி.

வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் தேதி மற்றும் நேரம்: 21.08.2025 தேதிக்கு முன்னதாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (பொது விடுமுறை நாள் தவிர) எந்த நாளிலும்.

பாதுகாப்பு வைப்புத்தொகை: ரூ. 15,000, தேர்தல் அதிகாரியிடம் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் அல்லது அரசு கருவூலத்தில் ரொக்கமாக டெபாசிட் செய்ய வேண்டும்.

வேட்புமனுவுடன் தேவையான ஆவணங்கள்:

வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் வேட்பாளரின் பெயர் தொடர்பான பதிவின் சான்றளிக்கப்பட்ட நகல்.

பாதுகாப்பு வைப்புத்தொகை ரசீது.

வேட்புமனு படிவங்களை மேற்கூறிய நேரத்தில் மேற்கூறிய அலுவலகத்தில் இருந்து பெறலாம்.

வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் இடம்: அறை எண். F-100, சங்கோஷ்டி-2, முதல் தளம், நாடாளுமன்ற கட்டிடம், புது தில்லி.

வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி மற்றும் நேரம்: 22.08.2025 காலை 11 மணி.

தேர்தலில் போட்டி இருக்குமானால் 07.08.2025 தேதியிட்ட ஆணையத்தின் அறிவிப்புகளின்படி, புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், முதல் தளம், வசுதா, அறை எண். F-101-ல் 09.09.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

***

(Release ID: 2153481)

AD/SM/KR


(Release ID: 2153655)