ஜவுளித்துறை அமைச்சகம்
11-வது தேசிய கைத்தறி தினம் பாரத மண்டபத்தில் 2025 ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடப்படவுள்ளது
Posted On:
06 AUG 2025 4:25PM by PIB Chennai
11-வது தேசிய கைத்தறி தினம் புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2025 ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மத்திய ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங், வெளியுறவு மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா, ஜவுளித்துறை செயலாளர் திருமதி நீலம் ஷமி ராவ், கைத்தறித்துறை மேம்பாட்டு ஆணையர் டாக்டர் எம் பீனா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த வாங்குவோர், பிரபல ஆளுமைகள், ஏற்றுமதியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 650 நெசவாளர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
கைத்தறி தொழில்துறையில் சிறப்பாக பங்களிப்பு செய்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு சந்த் கபீர் கைத்தறி விருதும், கைத்தறி துறையில் அர்ப்பணிப்பு, புதுமை கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டவர்களுக்கு தேசிய கைத்தறி விருதும் வழங்கப்படவுள்ளன.
***
(Release ID: 2153053)
AD/IR/AG/DL
(Release ID: 2153238)