ரெயில்வே அமைச்சகம்
பாவ்நகர்-அயோத்தி வாராந்திர ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார், மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
Posted On:
03 AUG 2025 7:56PM by PIB Chennai
குஜராத்தின் பாவ்நகரிலிருந்து பாவ்நகர்-அயோத்தி எக்ஸ்பிரஸ், ரேவா-புனே (ஹடப்சர்) எக்ஸ்பிரஸ் மற்றும் ஜபல்பூர்-ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று புதிய விரைவு ரயில் சேவைகளை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் திரு விஷ்ணு தியோ சாய் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் இந்த நிகழ்வில் இணைந்தனர்.
இந்த விழாவில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் பம்பானியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், இந்த மூன்று ரயில்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறினார். பாவ்நகர்-அயோத்தி எக்ஸ்பிரஸ், பாவ்நகரில் கலாச்சாரம் மற்றும் பக்தியை இணைக்கும் மற்றும் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கும். இன்று ஒரு பெரிய தொழில்துறை நகரமாக இருக்கும் புனே, ரேவா, ஜபல்பூர், சட்னா மற்றும் மைஹார் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை, பழங்குடிப் பகுதிக்கும் மிக முக்கியமானதாக இருக்கும், என்றார் அவர்.
மேலும், பிரதமர் திரு. நரேந்திர மோடி, ரயில்வேயுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ளார் என்றும், ரயில்வேயின் வளர்ச்சியை எப்போதும் வலியுறுத்துகிறார் என்றும் கூறினார். கடந்த 11 ஆண்டுகளில், ரயில்வே மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், ஒரு நாளைக்கு 12 கி.மீ என்ற வகையில், 34,000 கி.மீ புதிய ரயில் பாதைகள் கட்டப்பட்டுள்ளன. 1,300 நிலையங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன, இது உலகின் மிகப்பெரிய ரயில் நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தை உருவாக்குகிறது.
விழாவில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் திரு மோடியின் தலைமையில், நாடு வேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார். ஒரு புதிய இந்தியா உருவாகி வருகிறது, மேலும் மாற்றம் தொடர்கையில், ரயில்வேயும் புரட்சிகரமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. நவீனமயமாக்கலுடன், குடிமக்கள் இப்போது சரியான நேரத்தில் சிறந்த ரயில் சேவைகளைப் பெறுகிறார்கள். ரயில்வே துறையில் மாற்றம் என்பது வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் ஒரு முக்கிய பகுதியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2151982
***
RB/RJ
(Release ID: 2151988)