உள்துறை அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் சிறப்பு விவாதம் - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரை
ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் கௌரவத்தை அதிகரித்த ராணுவத்துக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் வாழ்த்துகள் - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
ஜம்மு-காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் முழுவதும் அகற்றப்படும் என்பது மோடி அரசின் தீர்மானம் – திரு அமித் ஷா
இந்தியாவில் பயங்கரவாதம் செழித்துப் பரவியதற்கு எதிர்க்கட்சிகளின் திருப்திப்படுத்தும் கொள்கையே காரணம் - திரு அமித் ஷா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை மோடி அரசு மீட்கும் - திரு அமித் ஷா
Posted On:
30 JUL 2025 11:00PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மாநிலங்களவையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற விவாத்திற்கு பதில் அளித்து உரையாற்றினார். பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் குடும்பங்களுக்குத் தமது இரங்கலை அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பாதுகாப்புப் படையினர் இந்தியாவின் மாண்பை அதிகரித்துள்ளனர் என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியையும் வாழ்த்திய அவர், நாட்டின் 140 கோடி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க அரசியல் ரீதியாக இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் கூறினார்.
ஜூலை 28-ம் தேதி, ஆபரேஷன் மகாதேவின் கீழ், காஷ்மீரில் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளான சுலேமான், ஆப்கான், ஜிப்ரான் ஆகியோர் நமது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாதிகளின் எஜமானர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 'ஆபரேஷன் மகாதேவ்' மூலம், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் மூலம், இதுவரை கொடுக்கப்பட்டிராத மிகத் துல்லியமான மற்றும் உடனடி பதிலடியை நமது பாதுகாப்புப் படைகள் கொடுத்துள்ளன என்று அவர் கூறினார். லஷ்கரின் ஒரு அமைப்பான டிஆர்எஃப், பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதாகவும், அந்த பயங்கரவாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர், "பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தனர்" என்பதற்கான ஆதாரத்தைக் கோரி பாகிஸ்தானையும் லஷ்கரையும் காப்பாற்ற முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சி தனது வாக்கு வங்கி அரசியலுக்காக பாகிஸ்தானை ஆதரிக்கவும், லஷ்கரைக் காப்பாற்றவும் தயங்கவில்லை என்று அவர் கூறினார். பயங்கரவாதிகளைக் கொல்வது அவ்வளவு எளிதானது அல்ல என்று திரு அமித் ஷா கூறினார். 22 நாட்களாக, சிஆர்பிஎஃப், ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஆகியோர் மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்த பயங்கரவாதிகளைத் துரத்திச் சென்று, ட்ரோன்கள் மூலம் அனுப்பப்பட்ட உணவை உண்டு அவர்களைக் கொன்றதாக அவர் கூறினார். எதிர்க்கட்சியின் முன்னுரிமை நாட்டின் பாதுகாப்பு அல்ல என்றும், அரசியல்தான் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் பயங்கரவாதம் செழித்துப் பரவியதற்கு எதிர்க்கட்சிகளின் திருப்திப்படுத்தும் கொள்கையே காரணம் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
காஷ்மீரை பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்க முடியாது என்ற செய்தியை பயங்கரவாதிகள் சொல்ல விரும்புவதவாதவும் ஆனால் காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதே பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தீர்மானம் என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 30-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி ஆயுதப்படைகளுக்கு 'செயல்பாட்டு சுதந்திரம்' வழங்கியதாகவும், மே 7 ஆம் தேதி அதிகாலை 1:04 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்த அரசு மீட்கும் என்றும் அவர் கூறினார்.
மோடி அரசின் கொள்கைகளால் காஷ்மீரில் பயங்கரவாதம் 70% குறைந்து அமைதியை நோக்கி அந்தப் பகுதி நகர்கிறது என்று திரு அமித் ஷா கூறினார். முன்பு காஷ்மீர் இளைஞர்கள் துப்பாக்கிகளை எடுத்தார்கள் என்று அவர் தெரிவித்தார். இப்போது காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேருவதில்லை என்று அவர் கூறினார். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீரில் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காஷ்மீரில் கல்வீச்சு மற்றும் தாக்குதல்கள் பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டன என்றும், அமைதிக்கான புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மோடி அரசு, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளைத் தடை செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். காஷ்மீரில் ஜனநாயகத்தின் வெற்றியாக பஞ்சாயத்து தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். காஷ்மீரில் 53 திட்டங்களுக்கு 59,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய வளர்ச்சிக்கு வழி வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவில் எழுதப்படும்போது, மோடியின் சகாப்தம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று திரு அமித் ஷா கூறினார்.
Release ID:2150501
AD/SM/PLM/KR
********
(Release ID: 2150638)