தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சஞ்சார் சாத்தி செயலியை 21 மொழிகளில் அறிமுகம் செய்தார் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா

Posted On: 29 JUL 2025 4:22PM by PIB Chennai

தொலைத்தொடர்பு தொடர்பான மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் மக்கள் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் புதுதில்லியில் இன்று துறை பிரநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் பாதுகாப்பு முயற்சியாக 'சஞ்சார் சாத்தி', மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது திருடப்பட்ட அல்லது தொலைந்து போன கைப்பேசிகளை முடக்கவும், கைப்பேசி மூலமான நிதி மோசடிகளை தடுக்கவும், பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

இதுவரை, 82 லட்சத்திற்கும் அதிகமான போலி கைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் 35 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

சஞ்சார் சாத்தி மொபைல் செயலி மிகப்பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது.

இதன் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் ஒரு முக்கிய முயற்சியாக மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா சஞ்சார் சாத்தி மொபைல் செயலியை இந்தியிலும், 21 பிராந்திய மொழிகளிலும் அறிமுகம் செய்துள்ளார். இது பல்வேறு மாநிலங்களில் தன் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும். 2025 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, பயனர்கள் சந்தேகத்திற்கிடமான தகவல் தொடர்புகளைப் புகார் அளிக்கவும், தொலைந்த/திருடப்பட்ட கைப்பேசிகளின் செயல்பாடுகளைத் தடுக்கவும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.  இது இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. இந்த செயலியை இதுவரை 46 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149729    

***

AD/SM/PLM/RJ/K/DL


(Release ID: 2149889)