மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாளை பாரத் மண்டபத்தில் அகில இந்திய கல்வி மாநாடு 2025 ஐ கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைக்கிறார்.

தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்த கருப்பொருள் அமர்வுகள், கல்வி மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்கான செயல்பாட்டுத் திட்டங்களை அமைத்தல்.

Posted On: 28 JUL 2025 4:49PM by PIB Chennai

கல்வி அமைச்சகம் ஜூலை 29, 2025 அன்று பாரத் மண்டபம் வளாகத்தில் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் 5வது ஆண்டு நிறைவை ஒட்டி அகில இந்திய கல்வி மாநாடு, 2025 ஐ ஏற்பாடு செய்கிறது. நாள் முழுவதும் நடைபெறும் விவாதங்களை கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைப்பார். தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த மாநாடு, கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 இன் கீழ் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, முன்னேறிச் செல்லும் வழியை வகுக்க ஒரு தளமாக செயல்படும். அகில இந்திய கல்வி மாநாடு, 2025 இன் போது நடைபெறும் விவாதங்கள் கல்வியை மேலும் அணுகக்கூடியதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும், திறன் சார்ந்ததாகவும், வேலைவாய்ப்புகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தும். மாணவர்கள் மாறும் உலகளாவிய பொருளாதாரத்திற்குத் தயாராக இருப்பதை உறுதி செய்யும். 2030 ஆம் ஆண்டுக்குள் 100% மொத்தப் பதிவு விகிதத்தை அடைய இடைநிலைக் கல்வியை மறுபரிசீலனை செய்தல், இந்திய மொழிகள், வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், இந்திய அறிவு சார் அமைப்புகளை  பிரதான நீரோட்டத்தில் கொண்டு வருதல் மற்றும் கற்றலை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்ற உள்ளடக்கிய தன்மையை வளர்ப்பது ஆகியவற்றில் இந்த மாநாடு சிறப்பு கவனம் செலுத்தும்.

 

என்இபி தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் கல்வித் துறையிலும், உயர்கல்வியிலும் புரட்சி ஏற்பட்டுள்ளது. நெகிழ்வுத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் புதுமைகளை ஏற்கும் உருமாற்றக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 170 பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய கல்வித் தர மதிப்பீட்டுக் கட்டமைப்பு (NCrF) கல்வி, திறன் அடிப்படையிலான மற்றும் அனுபவக் கற்றல் முழுவதும் தடையற்ற மதிப்பீடு வழங்கலை செயல்படுத்தியுள்ளது. கல்வித் கல்வித் தர மதிப்பீட்டுக் அமைப்பு 2,469 நிறுவனங்களை இணைத்து, 32 கோடிக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது, 2.36 கோடி தனித்துவமான தானியக்க நிரந்தர கல்வி கணக்கு பதிவு அடையாள அட்டைகள் (APAAR) ஏற்கனவே மதிப்பீடுகளுடன் விநியோகிக்கப்பட்டுள்ளன. 153 பல்கலைக்கழகங்களில் பல நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்களை அறிமுகப்படுத்துதல், அதே நேரத்தில் பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையான சேர்க்கை, இந்தியாவை 2035 ஆம் ஆண்டுக்குள் அதன் 50% மொத்த சேர்க்கை விகிதத்தை நெருங்கச் செய்கிறது.

 

தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் கணிசமாக விரிவடைந்துள்ளது, 116 உயர்கல்வி நிறுவனங்கள் 1,149 திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் திட்டங்களை வழங்குகின்றன, 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது பயனளிக்கின்றன, 107 நிறுவனங்கள் 544 ஆன்லைன் படிப்புகளை வழங்குகின்றன. ஸ்வயம் தளம் இப்போது 40% வரை மதிப்பீடு பரிமாற்றங்களை எளிதாக்குகிறது, 388 பல்கலைக்கழகங்கள் அதன் படிப்புகளை ஒருங்கிணைக்கின்றன. சம்ர்த் போன்ற டிஜிட்டல் முயற்சிகள் 440 மாவட்டங்களில் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 13,000 க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் நிர்வாகத்தை ஆதரிக்கின்றன, சேர்க்கை, பணம் செலுத்துதல் மற்றும் கல்விப் பதிவுகளை ஒழுங்குபடுத்துகின்றன.

 

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL) பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் பலதரப்பட்ட தலையீடுகள் மற்றும் முன்முயற்சிகளுடன் என்இபி 2020 ஐ செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2023-24 இன் தரவுகளின்படி, 14.72 லட்சம் பள்ளிகள், 98 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளைக் கொண்ட சுமார் 24.8 கோடி மாணவர்களுக்கு சேவை செய்கின்றனர். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் அதிக லாபத்தைக் ஈட்டியுள்ளன.

 

PM SHRI முன்முயற்சி 13,076 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, மாற்றத்தை வழங்கக் கூடிய என்இபி 2020-யின் முன்மாதிரியான பள்ளிகளாக மாற்றியுள்ளது, அதே நேரத்தில் பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் இப்போது பால் வாடிகா மாணவர்களை உள்ளடக்கியது மற்றும் 6.28 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஊட்டச்சத்து அமைப்புகளை ஆதரிக்கிறது. பள்ளிக் கல்விக்காக ஸ்வயம் பிரபாவின் தற்போதுள்ள 12 DTH சேனல்கள் 200 சேனல்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன, மொத்தம் 92,147 வீடியோ உள்ளடக்கங்கள் 30 மொழிகளில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்-களில் இருந்து பெறப்பட்ட 26,662 மணிநேர ஒளிபரப்புக்கு சமம்.

 

அகில இந்திய கல்வி மாநாடு (ABSS) 2025 இன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்துரையாடலின் கருப்பொருள் பகுதிகளாக இருக்கும். விவாதத்தின் முக்கியமான பகுதி:

 

கற்பித்தல்-கற்றலில் இந்திய மொழிகளின் பயன்பாடு.

 

இந்தியாவின் அடுத்த தலைமுறை கல்வி மற்றும் தொழில்துறை தலைமைத்துவத்தை வளர்ப்பது.

 

2030 ஆம் ஆண்டுக்குள் 100% மொத்தப் பதிவு விகிதத்தை அடைய இடைநிலைக் கல்வியை மறுபரிசீலனை செய்தல்.

 

அகில இந்திய கல்வி மாநாடு (ABSS) 2025 நிகழ்ச்சி நிரல் இந்த சாதனைகளை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில், அடுத்த கட்ட கல்வி மாற்றத்திற்கான பாடத்திட்டத்தையும் அமைக்கும். தொழில்துறை-கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்சார் பாதைகளைச் செம்மைப்படுத்துதல், டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பாடத்திட்டங்களில் நிலைத்தன்மையை இணைத்தல் ஆகியவற்றில் விவாதங்கள் நடைபெறும். இந்தியாவின் முதன்மையான கல்வி உச்சிமாநாட்டாக, அகில இந்திய கல்வி மாநாடு (ABSS) 2025, சமத்துவம், சிறந்து விளங்குதல் மற்றும் புதுமைக்கான நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும். என்இபி 2020 இன் தாக்கம் வரும் ஆண்டுகளில் கல்வி முன்னேற்றத்தைத் தொடர்ந்து இயக்குவதை உறுதி செய்யும்.

***

(Release ID: 2149319)

AD/SM/DL


(Release ID: 2149446)