நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மூன்றாவது தன்னார்வ ஆய்வறிக்கை - ஐநா உயர்நிலை அரசியல் மன்றத்தில் தாக்கல் செய்தார் நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு சுமன் பெரி

Posted On: 28 JUL 2025 12:14PM by PIB Chennai

ஐநா உயர்நிலை அரசியல் மன்றத்தின் 2025-ம் ஆண்டுக்கான உயர்நிலை கூட்டத்தில் இந்தியாவின் மூன்றாவது தேசிய தன்னார்வ ஆய்வறிக்கையை நித்தி ஆயோக் துணைத்தலைவர் திரு சுமன் பெரி 2025 ஜூலை 23 அன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான முன்னேற்றத்தை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகள், திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகியவற்றை உலகின் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்த அறிக்கை ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதாக திரு சுமன் பெரி கூறினார். பத்து ஆண்டுகளுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஒரு தேசிய இயக்கமாக மாறி இந்தியாவில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டது, சுமார் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படுவது, ஊட்டச்சத்து பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தொழில்துறை வளர்ச்சி, புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி போன்றவை குறித்து இந்த அறிக்கையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149181

***

AD/TS/PLM/AG/KR


(Release ID: 2149230)