பிரதமர் அலுவலகம்
இந்திய-மாலத்தீவுகள் இடையேயான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலைகள் வெளியீடு
Posted On:
25 JUL 2025 9:08PM by PIB Chennai
இந்திய-மாலத்தீவுகள் இடையேயான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் முகமது முய்சு ஆகியோர் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பழங்கால இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், இந்த நினைவு அஞ்சல் தலைகள், கேரளாவின் பேப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க படகுத் தளங்களில் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய மர படகு, இந்திய படகு உரு மற்றும் பாரம்பரிய மாலத்தீவு மீன்பிடி படகான வாது தோனி ஆகியவற்றை சித்தரிக்கின்றன. இந்தப் படகுகள் பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. பாரம்பரிய மாலத்தீவு மீன்பிடி படகான வாது தோனி, பவளப்பாறைகள் மற்றும் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மாலத்தீவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தையும் தீவு வாழ்க்கைக்கும் கடலுக்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பையும் சித்தரிக்கிறது.
1965 இல் சுதந்திரம் பெற்ற பிறகு மாலத்தீவுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த நினைவு அஞ்சல் தலை வெளியீடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் வரலாற்று உறவுகளைக் குறிக்கிறது.
***
(Release ID: 2148671)
AD/RB/ DL
(Release ID: 2148703)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam