தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் பத்திரிகை மற்றும் ஊடக சூழல் அமைப்பு 908 தனியார் சேனல்கள், 1.55 லட்சம் பத்திரிகைகளுடன் விரிவடைந்துள்ளது

Posted On: 23 JUL 2025 8:45PM by PIB Chennai

நாட்டின் பத்திரிகை, ஊடக சூழல் அமைப்பு அண்மை ஆண்டுகளில் வளர்ச்சிக் கண்டு வருகிறது.

இந்தியத் தலைமைப் பத்திரிகைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகளின் எண்ணிக்கை 2014-15-ம் ஆண்டில் 1.05 லட்சத்திலிருந்து 2024-25-ம் ஆண்டில் 1.55 லட்சமாக அதிகரித்துள்ளது.

தனியார் செயற்கைக் கோள் தொலைக்காட்சியின் எண்ணிக்கை இதே காலத்தில் 821-லிருந்து 908 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தூர்தர்ஷன் கட்டணமில்லா டிடீஎச் (DTH) ஒளிபரப்பு சேவையில் 50 தூர்தர்ஷன் மற்றும் 92 தனியார் சேனல்களும் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தனியார் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் பிரசார் பாரதியின் ஒளிபரப்புச் சேவையின் விரிவாக்கப் பணிகள் ஒளிபரப்பு கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு மேம்பாட்டுத் திட்டம், 2021-26-ன் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தத் தகவலை மக்களவையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

*** 

(Release ID: 2147585)

AD/SV/KPG/KR


(Release ID: 2147712)