தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் - மகாராஷ்டிர திரைப்பட, அரங்க மற்றும் கலாச்சார மேம்பாட்டுக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 21 JUL 2025 5:57PM by PIB Chennai

புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் - மகாராஷ்டிர திரைப்பட, அரங்க மற்றும் கலாச்சார மேம்பாட்டுக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. திரைப்படம் மற்றும் ஊடகத் துறைகளில் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.  இதனை புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன துணை வேந்தர் திரு தீரஜ் சிங், மகாராஷ்டிர திரைப்பட, அரங்க மற்றும் கலாச்சார மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் திருமதி சுவாதி மாசே-பட்டீல் பரிமாறிக் கொண்டனர். 

புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்வில், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னவிஸ், மாநில கலாச்சார விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ஆஷிஷ் ஷேலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்நுட்பத் துறைகளில் குறுகிய கால பயிற்சி வகுப்புகளை நடத்துவதும் ஊக்குவிப்பதும் இந்த ஒத்துழைப்பின் நோக்கமாகும். இந்த ஒத்துழைப்பு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று நிகழ்ச்சியில் பேசிய  முதலமைச்சர் திரு பட்னவிஸ் தெரிவித்தார். படைப்பாக்கத் துறைகளில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சிக் காரணமாக தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்கள் கூட உள்ளடக்கங்களை உருவாக்குவோராக வளர்ந்துள்ளனர் என்று கூறினார்.

இந்த ஆண்டு மே மாதத்தில்  வேவ்ஸ் 2025 தொடங்கப்பட்ட    நிலையில் மிகக் குறுகிய காலத்திலேயே இதன் வளர்ச்சி ரூ.92,000 கோடியிலிருந்து ரூ.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146456

***

AD/TS/SMB/KPG/DL


(Release ID: 2146555)