ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கைத்தறி விருதுகளை ஆகஸ்ட் 7 அன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார்

Posted On: 21 JUL 2025 4:33PM by PIB Chennai

கைத்தறி துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், சந்தையாளர்கள், புத்தொழில்  நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் மதிப்புமிக்க சந்த் கபீர் கைத்தறி விருது மற்றும் தேசிய கைத்தறி விருது-2024-ஐ மத்திய ஜவுளி அமைச்சகம் அறிவிக்கிறது.

இந்த ஆண்டு ஐந்து சந்த் கபீர் விருதுகள், 19 தேசிய கைத்தறி விருதுகள் என மொத்தம் 24 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர். இவ்விருதுகளை 11-வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டத்தின் போது புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2025 ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்துறை தலைவர்கள், வடிவமைப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், அரசு உயரதிகாரிகள், மாணவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் அதிகமான நெசவாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

***

(Release ID: 2146379)

AD/TS/IR/AG/DL


(Release ID: 2146552)