பிரதமர் அலுவலகம்
வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணம் சென்று திரும்பிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை பிரதமர் வரவேற்றார்
प्रविष्टि तिथि:
15 JUL 2025 3:34PM by PIB Chennai
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை பிரதமர் இன்று வரவேற்றார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற முறையில், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் சாதனை நாட்டின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஒரு முக்கியத் தருணத்தைக் குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"விண்வெளிக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி பயணமான ககன்யானை நோக்கிய மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது."
***
(Release ID: 2144844 )
AD/TS/IR/SG/KR
(रिलीज़ आईडी: 2144876)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam