தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் உஜ்ஜயினியில் ஆகாஷ்வாணி மையத்தை மத்திய அரசு நிறுவ உள்ளது

Posted On: 08 JUL 2025 6:51PM by PIB Chennai

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

 

இந்த சந்திப்பின்போது, மத்தியப் பிரதேசத்தில் நடந்து வரும் மற்றும் எதிர்கால வளர்ச்சி முயற்சிகள் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. ஊடக தொடர்பு, பொதுத் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷன் போன்ற மத்திய ஊடகத் தளங்களால் மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சிக் கதைகளை எவ்வாறு மேலும் விரிவுபடுத்த முடியும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

 

மத்திய அரசின் ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உஜ்ஜயினியில் ஒரு புதிய ஆகாஷ்வாணி மையத்தை நிறுவுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிராந்திய ஒலிபரப்பை வலுப்படுத்துதல், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மத்தியப் பிரதேச மக்களுக்கு சரியான நேரத்தில் தகவல்களைப் பரப்புதல் ஆகியவை  இந்த புதிய மையத்தின் நோக்கமாகும். பிரச்சார் பாரதியின் ஒலிபரப்பு உள்கட்டமைப்பின் விரிவாக்கம் மற்றும் மேம்பாடு, உள்ளடக்க மேம்பாடு மற்றும் அமைப்பு தொடர்பான குடிமைப் பணிகள் சார்ந்த செலவுகளுக்கு நிதி உதவி வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

மாநிலத்தில், குறிப்பாக வசதி குறைந்த மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களில், வலுவான ஒலிபரப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேம்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வசதிகள், மாநிலம் முழுவதும் உள்ள குடிமக்களுக்கு தகவல் மற்றும் அரசின் தகவல்தொடர்புகளை கடைசி மைல் வரை வழங்குவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். பல துறைகளில் மத்திய அரசுக்கும் மத்தியப் பிரதேசத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், நன்மைகள் அடிமட்ட மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், ஒரு வளர்ந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பதற்கும் பரஸ்பர உறுதிப்பாட்டுடன் சந்திப்பு நிறைவடைந்தது.

 

மத்தியப் பிரதேச பாஜக மாநிலத் தலைவர் திரு ஹேமந்த் கண்டேல்வால், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, ஆகாஷ்வாணியின் தலைமை இயக்குநர் டாக்டர் பிரக்யா பாலிவால் கவுர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143200

 

***

AD/RB/DL


(Release ID: 2143249)