கூட்டுறவு அமைச்சகம்
குஜராத்தின் ஆனந்தில் கூட்டுறவு அமைச்சகத்தின் 4 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியதன் மூலம், பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் 31 கோடி மக்களுடன் இணைந்த 8.4 லட்சத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளார் : திரு அமித் ஷா
2 லட்சம் புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவுப் பல்கலைக்கழகம், தேசிய கூட்டுறவு தரவுத்தளம் போன்ற முயற்சிகள் நாட்டின் கூட்டுறவு இயக்கத்தைப் பெரிதும் வலுப்படுத்தும்: திரு அமித் ஷா
Posted On:
06 JUL 2025 5:35PM by PIB Chennai
குஜராத்தின் ஆனந்தில் இன்று (06.07.2025) நடைபெற்ற கூட்டுறவு அமைச்சகத்தின் 4 ஆண்டு நிறைவு விழா, சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா உரையாற்றினார். புதிதாக உருவாக்கப்பட்ட பல மாநில கூட்டுறவு அமைப்பான சர்தார் படேல் கூட்டுறவு பால் கூட்டமைப்பு லிமிடெட்டை திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். கேடாவில் அமுல் சீஸ் ஆலை விரிவாக்கத்தையும், மோகரில் அதிநவீன சாக்லேட் ஆலையையும் அவர் தொடங்கி வைத்தார். ஆனந்தில் உள்ள தேசிய கூட்டுறவு பால் கூட்டமைப்பின் புதிய அலுவலகக் கட்டடத்தையும், தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தின் அலுவலக வளாகத்தில் மணிபென் படேல் பவனையும் அமைச்சர் திறந்து வைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய கூட்டுறவு இணையமைச்சர்கள் திரு கிருஷன் பால் குர்ஜர், திரு முரளிதர் மொஹோல், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை இணையமைச்சர் திரு எஸ்.பி. சிங் பாகேல், மத்திய கூட்டுறவுத் துறைச் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூட்டானி உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (GCMMF) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று மிகவும் முக்கியமான நாள் என்றார். ஏனெனில் இந்த நாள் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்கத்தில் அதே நாளில் பிறந்தார் என்றும் சுதந்திரத்திற்கு முன்பே நாட்டின் பல வகையான பிரச்சினைகளைத் தீர்க்க சியாமா பிரசாத் முகர்ஜி மக்களை ஒருங்கிணைத்தார் என்றும் அவர் கூறினார். அவர் காஷ்மீருக்காக தன்னைத் தியாகம் செய்தவர் என்றும் திரு அமித் ஷா கூறினார்.
வேத காலத்திலிருந்தே நமது நாட்டில் கூட்டுறவு என்பது சமூகத்தின் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது என்றும், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த பாரம்பரியத்திற்கு ஒரு புதிய அங்கீகாரத்தை அளித்து, 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் நாட்டில் முதல் முறையாக ஒரு தனி கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்க முடிவு செய்ததாகவும் திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி, சுமார் 31 கோடி மக்களுடன் இணைக்கப்பட்ட 8 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கங்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளார் என திரு அமித் ஷா தெரிவித்தார். பால் முதல் வங்கி வரை, சர்க்கரை ஆலைகள் முதல் சந்தைப்படுத்தல் வரை, ரொக்கக் கடன் முதல் டிஜிட்டல் பணம் செலுத்துதல் வரை, இப்போது கூட்டுறவு சங்கங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முழு திறனுடன் பங்களிக்கின்றன என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்ட 4 ஆண்டுகளில் 6-0க்கும் மேற்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச கூட்டுறவு ஆண்டில் இந்த கூட்டுறவுக் கலாச்சாரத்தை விரிவுபடுத்த இந்த அரசு தீர்மானித்துள்ளது என்று அவர் கூறினார். திரிபுவன் தாஸ் படேலின் பெயரில் திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழகம் என்ற கூட்டுறவுப் நிறுவப்படுவதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், 2 லட்சம் புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு பல்கலைக்கழகம், தேசிய கூட்டுறவு தரவுத்தளம், தானிய விற்பனை மற்றும் உற்பத்தி தொடர்பான மூன்று தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்புகள், பால் துறைக்காக உருவாக்கப்பட உள்ள மூன்று தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்புகள், போன்ற அனைத்து முயற்சிகளும் நமது நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை பெரிதும் வலுப்படுத்தும் என்று திரு அமித் ஷா கூறினார்.
*****
(Release ID: 2142719)
AD/PLM/RJ
(Release ID: 2142741)