தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைக்காட்சி மதிப்பீடுகளை அளவிடுவதில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் வகையில் டிஆர்பி கொள்கையில் திருத்தம்

Posted On: 03 JUL 2025 7:16PM by PIB Chennai

இந்தியாவில் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் அண்மையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எட்டியுள்ளது. பார்வையாளர்கள்  தற்போது கேபிள், டிடிஎச் தளங்கள், கைபேசி, ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் தற்போதைய தொலைக்காட்சி மதிப்பீட்டு (ரேட்டிங்) புள்ளிகள் (டிஆர்பி), வளர்ந்து வரும் தொலைக்காட்சி பார்வையாளர்களை முழுமையாக அளவீடு செய்ய முடியாமல் உள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான கொள்கை வழிகாட்டுதல்களில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. 2025 ஜூலை 2-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட முன்மொழியப்பட்ட வரைவு, மேலும் பல தொலைக்காட்சி மதிப்பீடு நிறுவனங்களை அனுமதிக்க வழிவகை செய்கிறது. மேலும்  இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர் அளவீட்டு சூழல் அமைப்பை ஜனநாயகப்படுத்தவும், நவீனப்படுத்துவதை அனுமதிக்கும் வகையிலும் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சில விதிகளை நீக்குகிறது.

இந்த வரைவு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நியாயமான போட்டியை  உருவாக்குதல், மிகவும் துல்லியமான மற்றும் பிரதிநிதித்துவ தரவை ஏற்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் பார்வையாளர்களின் மாறுபட்ட, வளர்ந்து வரும் ஊடக நுகர்வு பழக்கங்களை டிஆர்பி அமைப்பு பிரதிபலிப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது சுமார் 230 மில்லியன் வீடுகளில் தொலைக்காட்சிகள் உள்ளன. ஆனால் பார்வையாளர்கள் குறித்த தரவை பதிவு செய்ய தற்போது சுமார் 58,000 மக்கள் தரவு மீட்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது ஸ்மார்ட் டிவிகள், ஒலி-ஒளி சாதனங்கள், கைபேசி பயன்பாடுகள் போன்ற வளர்ந்து வரும் தளங்களின் பார்வையாளர்களை தற்போதைய பார்வையாளர் மதிப்பீடு தொழில்நுட்பம் போதுமான அளவு ஈர்க்கவில்லை. வளர்ந்து வரும் இந்த பார்வையிடும் முறைகளுக்கும் தற்போதைய அளவீட்டு கட்டமைப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியானது மதிப்பீடுகள் குறித்த துல்லியத்தை பாதிக்கிறது. இது ஒளிபரப்பாளர்களுக்கான வருவாய் திட்டமிடல் மற்றும் விளம்பர உத்திகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் சிக்கல்களைச் சரிசெய்ய, அமைச்சகம் தற்போதுள்ள வழிகாட்டுதல்களில் முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பல நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும், தொலைக்காட்சி தளங்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் பிரதிநிதித்துவத் தரவை வழங்கவும் அனுமதிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும். மதிப்பீட்டு தொழில்நுட்பம், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து அதிக முதலீடுகளைப் பெறவும் இந்தத் திருத்தங்கள் உதவும். மேலும் இந்த சீர்திருத்தங்கள் இந்தியா மிகவும் வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தொலைக்காட்சி மதிப்பீட்டு சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2141914)

AD/TS/GK/AG/SG


(Release ID: 2142156)