நிலக்கரி அமைச்சகம்
சுரங்கங்களை மூடுதல் மற்றும் மறுபயன்பாடு தொடர்பான சமுதாய ஈடுபாட்டு செயல் திட்டத்தை சுரங்க அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது
Posted On:
02 JUL 2025 1:16PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகம் ரீக்ளய்ம் (RECLAIM) என்ற சுரங்கங்கள் தொடர்பான, சமூக ஈடுபாடு மற்றும் மேம்பாட்டு செயல் திட்டத்தைத் தொடங்க உள்ளது. இந்த செயல்திட்டத்தை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி 2025 ஜூலை 4 அன்று தொடங்கி வைக்கிறார். நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பு, ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்த விரிவான சமூக மேம்பாட்டு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. சுரங்கங்களை மூடுவது என்பது அப்பகுதியில் உள்ள நிலப்பரப்பு, உள்ளூர் வாழ்வாதாரங்கள் இரண்டிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து, நிலையான மாற்றத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கை இதுவாகும்.
ரீக்ளெய்ம் (RECLAIM) என குறிப்பிடப்படும் கட்டமைப்பு, சுரங்க மூடல் மற்றும் மூடலுக்குப் பிந்தைய கட்டங்களை உள்ளடக்கிய சமூக ஈடுபாடு மற்றும் மேம்பாட்டிற்கான கட்டமைக்கப்பட்ட வழிகாட்டியாக இத்திட்டம் செயல்படும். இந்த செயல் திட்டம் இந்திய சூழலுக்கு ஏற்ற வழிமுறைகளைக் கொண்டது. இது நம்பிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால சமூக-பொருளாதார நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
**
(Release ID: 2141471)
AD/TS/PLM/KPG/KR
(Release ID: 2141585)