பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பொருளாதார சூழலை மறுவடிவமைத்த சிறப்புமிக்க சீர்திருத்தமாக ஜிஎஸ்டி திகழ்கிறது: பிரதமர்

Posted On: 01 JUL 2025 3:49PM by PIB Chennai

சரக்கு மற்றும சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார சூழலை மறுவடிவமைத்த சிறப்புமிக்க சீர்திருத்தமாக அது தனித்து திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். "இணக்க நடைமுறையைக் குறைப்பதன் மூலம், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் வணிகம் செய்வதை எளிதாக்குவதை இது பெரிதும் மேம்படுத்தியுள்ளது" என்று திரு மோடி கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியாவின் பொருளாதார சூழலை மறுவடிவமைத்த சிறப்புமிக்க சீர்திருத்தமாக அது தனித்து திகழ்கிறது.

இணக்கச் சுமையைக் குறைப்பதன் மூலம், வணிகம் செய்வதை எளிதாக்குவதை, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் வணிகம் செய்வதை இது பெரிதும் மேம்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சந்தையை ஒருங்கிணைப்பதற்கான இந்தப் பயணத்தில் மாநிலங்களை சம பங்காளிகளாக மாற்றுவதன் மூலம் உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியை வளர்க்கும் அதே வேளையில், ஜிஎஸ்டி பொருளாதார வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த இயந்திரமாகவும் செயல்பட்டு வருகிறது."

***

(Release ID: 2141169)

AD/TS/IR/RJ/KR


(Release ID: 2141283)