மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 01 JUL 2025 3:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் விளையாட்டு சூழலை மறுவடிவமைத்து, விளையாட்டு மூலம் குடிமக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியான தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தப் புதிய கொள்கை, தற்போதுள்ள தேசிய விளையாட்டுக் கொள்கை 2001-க்கு மாற்றாகவும் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தி மையமாகவும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்குவதற்கான வலுவான போட்டியாளராகவும் நிலைநிறுத்துவதற்கான தொலைநோக்கு மற்றும் திட்டமிடலை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

தேசிய விளையாட்டுக் கொள்கை 2025 என்பது மத்திய அமைச்சகங்கள், நிதி ஆயோக், மாநில அரசுகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், விளையாட்டு வீரர்கள், கள நிபுணர்கள் மற்றும் பொது பங்குதாரர்கள் ஆகியோரின் விரிவான ஆலோசனைகளால் உருவாக்கப்பட்டதாகும்.

உலகளாவிய நிலையில் சிறந்து விளங்குதல் :

திறமையை முன்கூட்டியே அடையாளம் கண்டு வளர்ப்பதற்கான வழிமுறைகள் உட்பட, அடிப்படை நிலையிலிருந்து மேல்நிலை வரை விளையாட்டுத் திட்டங்களை வலுப்படுத்துதல்.

போட்டிகளை நடத்துவதை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

பயிற்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான முழுமையான ஆதரவுக்கான உலகத் தரம் வாய்ந்த அமைப்புகளை உருவாக்குதல்.

தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் திறன் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துதல்.

விளையாட்டுத் திறனை அதிகரிக்க விளையாட்டு அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்தல்.

பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் துணை ஊழியர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துதல்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141138

***

AD/TS/IR/RJ/KR


(Release ID: 2141235)