பிரதமர் அலுவலகம்
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதி உதவியையும் அவர் அறிவித்தார்
Posted On:
30 JUN 2025 2:33PM by PIB Chennai
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"தெலங்கானாவின் சங்கரெட்டியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு நிகழ்ந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்: பிரதமர்"
***
(Release ID: 2140739)
AD/TS/IR/AG/KR
(Release ID: 2140779)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam