கூட்டுறவு அமைச்சகம்
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவு அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் ஜூன் 30 அன்று புதுதில்லியில் நடைபெறுகிறது
Posted On:
28 JUN 2025 11:15AM by PIB Chennai
மத்திய கூட்டுறவு அமைச்சகமானது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவு அமைச்சர்களுடனான மந்தன் பைதக் எனப்படும் ஆலோசனை உரையாடல் கூட்ட அமர்வை 2025 ஜூன் 30 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் இந்த மந்தன் பைதக் நடைபெறும். இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வில் மாநில கூட்டுறவு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள்/முதன்மைச் செயலாளர்கள்/மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவுத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்குகூட்டு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்யவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், முன்னோக்கிச் செல்லும் வழியை ஆராயவும் ஒரு தளமாக இக்கூட்டம் செயல்படும். கூட்டுறவு அமைச்சகத்தின் முன்முயற்சிகளையும் திட்டங்களையும் விரிவாக மதிப்பாய்வு செய்வதும், சிறந்த நடைமுறைகள் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பரிந்துரைகளைப் பெறுவதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையான கூட்டுறவு மூலம் வளம் என்ற தொலைநோக்கு இலக்கைப் பரஸ்பர ஒருங்கிணைப்பு மூலம் அடைவதற்கான, பகிரப்பட்ட செயல்பாட்டை அதிகரிப்பது இந்த மந்தன் பைதக்கின் நோக்கமாகும்.
******
(Release ID: 2140345)
AD/PLM/TS/SG
(Release ID: 2140377)