பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நாளை (ஜூன் 28) புதுதில்லியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 27 JUN 2025 5:06PM by PIB Chennai

ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை (ஜூன் 28)  காலை 11 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து   உரையாற்றுகிறார்.

மதிப்பிற்குரிய சமண ஆன்மீகத் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சாரிய வித்யானந்த் மகராஜின் 100-வது பிறந்தநாளில் அவரை கவுரவிக்க பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளை ஒத்துழைப்புடன் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள ஓராண்டு கால தேசிய நிகழ்வின் முறைப்படியான தொடக்கத்தை குறிப்பதாக இந்த நிகழ்ச்சி இருக்கும். அவரது வாழ்க்கையையும், மரபையும் கொண்டாடுவது, அவரது செய்தியை பரவலாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கலாச்சார, இலக்கிய, கல்வி சார்ந்த ஆன்மீக முன்முயற்சிகளை உள்ளடக்கி நாடு முழுவதும் ஓராண்டு கால கொண்டாட்டம் நடைபெறும்.

சமண தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் அதிகமான நூல்களை ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் எழுதியுள்ளார். நாடு முழுவதும் உள்ள தொன்மையான சமண கோயில்களைப் புனரமைக்கும் பணியில் அவர் முக்கியமான பங்கு வகித்தார். கல்விக்கு குறிப்பாக பிரகிருதி, சமண தத்துவம், செவ்வியல் மொழிகளுக்கு அவர் பணியாற்றியுள்ளார்.

***

(Release ID: 2140190)
AD/TS/SMB/RR/DL


(रिलीज़ आईडी: 2140247) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam