இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர்களுக்கு டிஜிட்டல் சேவையை மேம்படுத்த, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் இணையதளத்துடன், வாட்ஸ் அப் செயலியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது
Posted On:
27 JUN 2025 11:09AM by PIB Chennai
இளைஞர்களுக்கான டிஜிட்டல் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் இணையதளத்துடன் வாட்ஸ் அப் செயலியை (https://mybharat.gov.in) ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் சாட்போட், ஆகியவை மைபாரத் இணைய தளத்தில் நேரலை பயன்பாட்டில் உள்ளது. மேலும் வாட்ஸ்அப் எண் (7289001515) வழியாகவும், நேரடியாக அணுக முடியும். இது பயனர்களுக்கு தடையற்ற, நிகழ்நேர எளிய வழி தொடர்பை வழங்குகிறது.
வாட்ஸ்அப், சாட்போட்டில் இணைய, தனிநபர் 7289001515 எண்ணுக்கு 'Hi' என்ற செய்தியை அனுப்ப வேண்டும். தனிப்பட்ட உள்நுழைவு அடையாள எண் (ஓடிபி) மூலம் அடையாளம் காணப்பட்டு அனுமதி வழங்கப்படும்.
இந்த ஒருங்கிணைப்பு, இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் டிஜிட்டல் தளங்களில் பொது சேவைகளை அனுமதிப்பதின் மூலம் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. மேலும் இளைஞர்கள் இந்த சேவைகளை பயன்படுத்தவும் இது குறித்த தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளவும் உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140066
***
AD/TS/GK/AG/KR
(Release ID: 2140137)