தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மைகவ் மூலம் #இந்தியாவின் மாற்றத்தில் எனது அனுபவம் இயக்கத்தில் பங்கேற்று பரிசுகளை வெல்ல தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது

Posted On: 20 JUN 2025 5:21PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வளர்ச்சி மற்றும் மாற்றம் தரும் நிர்வாகத்தில் 11 ஆண்டுகளை கொண்டாடுவதற்கு இந்தியாவின் மாற்றத்தில் எனது அனுபவம் என்ற இயக்கத்தின் கீழ் நடைபெற உள்ள நாடு தழுவிய படைப்பாக்க போட்டிகளில் பங்கேற்க மைகவ் தளத்துடன் இணைந்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனைத்து குடிமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. மைகவ் இணையப்பக்கத்தில் இந்தப் போட்டிகள் 2025 ஜூலை 9 வரை நடைபெறும்.

இந்தப் போட்டிகளின் விவரம்

  1. இன்ஸ்டாகிராம் ரீல் தயாரிப்பு போட்டி #BadaltaBharatMeraAnubhav

டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, திறன் இந்தியா போன்ற மையப் பொருள்களில் 30 – 60 நொடிகளுக்கு ரீல்கள் தயாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,000; இரண்டு 2-ம் பரிசுகள் ரூ.25,000, ரூ.10,000; 7 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.5,000 வழங்கப்படும்.

https://www.mygov.in/task/badalta-bharat-mera-anubhav-instagram-reel-contest/?target=inapp&type=task&nid=359974

  1. யூடியூப் படங்கள் போட்டி #BadaltaBharatMeraAnubhav

மாறி வரும் பாரதத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் மனம் கவரும், ஊக்கமளிக்கும் ரயில் நிலையம், உள்ளூர் முன்முயற்சிகள், கலாச்சார விழாக்கள் போன்ற காட்சிகளை யூடியூபில் பகிர மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,000; இரண்டு 2-ம் பரிசுகள் ரூ.25,000, ரூ.10,000; 7 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.5,000  வழங்கப்படும்.

https://www.mygov.in/task/badalta-bharat-mera-anubhav-youtube-shorts-challenge/?target=inapp&type=task&nid=359963

  1. பிளாக் (வலைப்பூ) பாரத் போட்டி: மாற்றத்தை எழுதுங்கள் #BadaltaBharatMeraAnubhav

இந்தியாவின் மாற்றம் தரும் பயணம் குறித்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள், சிந்தனையாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் பார்வைகளை வலைப்பூ (பிளாக்) பக்கத்தில் 800 முதல் 1200 வரையிலான வார்த்தைகளில் எழுதலாம். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,000; இரண்டு 2-ம் பரிசுகள் ரூ.25,000, ரூ.10,000; 7 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.5,000 வழங்கப்படும்.

https://www.mygov.in/task/badalta-bharat-mera-anubhav-blog-writing-contest/

  1. வளர்ச்சியடைந்த இந்தியா விநாடி வினா 2025: #BadaltaBharatMeraAnubhav

இந்தியாவின் கொள்கை சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி போன்றவற்றில் குடிமக்களின் விழிப்புணர்வை சோதிக்கும் வகையில் அறிவியல்பூர்வ போட்டி. இதில் பங்கேற்று முதன்மை வெற்றியாளருக்கு ரூ.1லட்சம், 2 மற்றும் 3-ம் இடம் பெறுவோருக்கு முறையே ரூ.75,000, ரூ.50,000 வழங்கப்படும். இவர்கள் தவிர மேலும் 300 வெற்றியாளர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும்.

https://quiz.mygov.in/quiz/viksit-bharat-2025-quiz/

  1. குறும்படப் போட்டி – புதிய இந்தியாவின் கதை
    #BadaltaBharatMeraAnubhav

வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், வீடியோ எடிட்டர்கள், மாணவர்கள் 10 நிமிடம் வரை குறும்படங்கள் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். கதை சொல்லுதல், ஆவணப்படம் அல்லது திரைப்பட பாணியிலான காட்சிகளாக குறும்படம் இருக்கலாம். வெற்றியாளருக்கு முதல் பரிசாக ரூ.3 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம் என இருவருக்கும் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக இரண்டு பேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும்.

https://www.mygov.in/task/short-av-challenge-story-new-india/?target=inapp&type=task&nid=360007

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138035

***

AD/SMB/RR/KR/DL


(Release ID: 2138088)