குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவரின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து

Posted On: 20 JUN 2025 11:40AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு  குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கர் இன்று  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு;

"குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடக்கம், எளிமை மற்றும் கம்பீரத்தை எடுத்துக்காட்டும், பணிவுமிக்க தொடக்கத்திலிருந்து மிக உயரிய அரசியல் சாசனப் பதவி வரையிலான, அவரது அசாதாரணமான பயணம், நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கிறது. சட்டமன்ற உறுப்பினராகஆளுநராகஇப்போது மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக, பொது சேவையில் தமது பயணம் முழுவதும் அவர் தொடர்ந்து உயரிய தரநிலையுடன் செயல்பட்டு வருகிறார் - இது அனைவராலும் பின்பற்றத்தக்க மரபாகும் .

குடியரசுத் தலைவர் மாளிகையில், நேற்று அவரை நேரில் வாழ்த்தியதில் நான் பெருமைப்படுகிறேன். இந்தப் பிறந்தநாள் அவருக்கு நிறைந்த  ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைக் கொண்டுவரட்டும், மேலும் நமது தேசத்திற்கு  தொடர்ந்து வலிமையுடன் தொண்டாற்ற அவரை எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக."

***

(Release ID: 2137893)

AD/PKV/SG/KR


(Release ID: 2138007)