பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சியையும் அதன் மூலம் தற்சார்பு மற்றும் நவீனமயமாக்கல் வலுப்படுத்தப்பட்டுள்ளதையும் பிரதமர் பாராட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 10 JUN 2025 9:47AM by PIB Chennai

கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா தனது பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது என்றும், நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தன்னிறைவு ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்துவதன் மூலம் இது ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.

இந்திய மக்களின் கூட்டு உறுதிப்பாடு, பாதுகாப்பில் அதிக தன்னிறைவு மற்றும் தொழில்நுட்ப சிறப்பை நோக்கி இந்தியாவை முன்னோக்கி நகர்த்துவதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு குறித்து பிரதமர் பெருமை தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மைகவ்இந்தியா பதிவிற்கு திரு மோடி பதிலளித்திருப்பதாவது:

"கடந்த 11 ஆண்டுகளில் நமது பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்பு தளவாட உற்பத்தியைப் பொறுத்தவரை நவீனமயமாக்கல் மற்றும் தற்சார்பு ஆகிய இரண்டிலும் சிறப்பான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டை வலிமையாக்கும் உறுதியுடன் இந்திய மக்கள் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளனர் என்பதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது! #11YearsOfRakshaShakti"  

***

(Release ID: 2135281)
AD/TS/IR/RR/KR


(रिलीज़ आईडी: 2135336) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Nepali , Marathi , हिन्दी , Bengali-TR , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada