விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் வளர்ச்சிக்கான சங்கல்ப இயக்கத்தின் 8-வது நாள்- பஞ்சாப் விவசாயிகளுடன் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 05 JUN 2025 4:28PM by PIB Chennai

வேளாண் வளர்ச்சிக்கான சங்கல்ப இயக்கம் வெற்றிகரமாக அதன் இலக்கில் பாதியை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை இது சென்றடைந்துள்ளது. இந்த இயக்கத்தின் 8-வது நாளில், மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், விஞ்ஞானிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், அறிவியல் அறிவை ஆய்வகத்திலிருந்து விளைநிலத்திற்கு கொண்டு வருவதன் மூலம் விவசாய ஆராய்ச்சிக்கும் விவசாய சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும் என்று கூறினார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வேளாண் விஞ்ஞானிகள் உள்ளூர் நிலைமைக்கு ஏற்ப விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு, மண் ஊட்டச்சத்துக்கள், பருவநிலைக்கு பொருத்தமான பயிர் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது குறித்த வழிகாட்டுதலை வழங்குவதாக அவர் தெரிவித்தார். பூச்சி கட்டுப்பாடு, வேளாண் வேதிப்பொருட்களின் சரியான பயன்பாடு ஆகியவை குறித்த கல்வி விவசாயிகளுக்கு கற்பிக்கப்படுகிறது என அமைச்சர் கூறினார். இந்த விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் சந்திக்கும் போது சேகரிக்கப்படும் தகவல்கள், மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உணவு உற்பத்தியில் பஞ்சாப் விவசாயிகளின் பங்களிப்பைப் பாராட்டிய திரு சிவராஜ் சிங் சௌகான், பஞ்சாப் நீண்ட காலமாக இந்தியாவின் உணவு உற்பத்தி மையமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். நாட்டின் விவசாய முன்னேற்றத்தில் பஞ்சாப் விவசாயிகளின் பங்கிற்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு சாதனை அளவிலான கோதுமை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அமைச்சர் கூறினார். மேலும் அரிசி, சோளம், நிலக்கடலை, சோயாபீன், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.

***

(Release ID: 2134181)

AD/TS/PLM/AG/KR


(रिलीज़ आईडी: 2134217) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Malayalam