விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வேளாண்மை – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு 2025-ல் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்றார்

Posted On: 04 JUN 2025 6:08PM by PIB Chennai

இந்திய தேசிய சூரிய சக்தி கூட்டமைப்பு இன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த தேசிய வேளாண்மை – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு 2025-ல் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அறிக்கையையும், வேளாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த வருடாந்தர விவர கையேட்டையும் அவர் வெளியிட்டார்.  கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் விவசாயிகளிடையே வேளாண் துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு குறித்து கலந்துரையாடலையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்த இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க முக்கியமானதாக சூரிய மின் தகடுகள் உள்ளன என்றும், விவசாயிகளுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய பிஎம்- குசும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

வயல்வெளிகளில் மேல்நோக்கிய சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவுமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்ட அவர், இவற்றின் கீழ் பயிர்கள் வளர்வது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு உணவு மற்றும் எரிசக்தி கிடைக்க உதவியாக இருக்கும் என்றார். இத்தகைய திட்டத்தை அமல்படுத்தினால் அரசு நிச்சயம் அதற்கு ஆதரவாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜூன் 05 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை அர்த்தமுள்ள வகையில் அனைவரும் கொண்டாட அழைப்பு விடுத்த  திரு சௌகான் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சூரிய மின்சக்தி ஒரு மைல்கல்லாக மாறும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133884

***

AD/SMB/AG/DL


(Release ID: 2133906) Visitor Counter : 5