தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பிரிக்ஸில் உள்ளடக்கிய டிஜிட்டல் ஆளுகைக்கான உலகளாவிய அளவுகோலாக இந்தியாவின் மின்னணு பொது உள்கட்டமைப்பை டாக்டர் பெம்மசானி சந்திர சேகர் காட்சிப்படுத்தினார்
Posted On:
03 JUN 2025 11:02AM by PIB Chennai
பிரேசிலின் பிரேசிலியாவில் நடைபெற்ற 11-வது பிரிக்ஸ் தகவல் தொடர்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது உள்ளடக்கிய, நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான மின்னணு மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்தியா சார்பில் பங்கேற்ற தகவல் தொடர்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திர சேகர், பிரேசிலின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தால் நிர்ணயிக்கப்பட்ட முக்கிய கருப்பொருளான உலகளாவிய மற்றும் விண்வெளி நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, மின்னணு சூழல் அமைப்பு ஆகியவற்றுடன் இந்தியாவின் முன்னுரிமைகளை இணைத்து அறிக்கையை சமர்ப்பித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டின் மின்னணு பொது உள்கட்டமைப்பை, உள்ளடக்கிய மற்றும் மாற்றத்தக்க மின்னணு நிர்வாகத்திற்கான உலகளாவிய அளவுகோலாக முன்வைத்தார். உலகளாவிய, முறையான தொடர்பை மேம்படுத்துவதில் ஆதார் மற்றும் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை போன்ற முதன்மை முயற்சிகளின் முக்கியப் பங்கை அமைச்சர் எடுத்துரைத்தார். ஆதார் அடையாள அட்டை 950 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான மின்னணு அடையாளத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இது அத்தியாவசிய பொது மற்றும் தனியார் சேவைகளுக்கு தடையற்ற அணுகலை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133444
***
AD/SM/IR/KPG/KR
(Release ID: 2133563)
Visitor Counter : 2