உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிராந்திய போக்குவரத்துக்கான இணைப்பை அதிகரிக்கும் வகையில், சட்னா மற்றும் தாதியா விமான நிலையங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்

Posted On: 31 MAY 2025 7:30PM by PIB Chennai

பிராந்திய போக்குவரத்துக்கான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சட்னா விமான நிலையத்தையும் மேம்படுத்தப்பட்ட தாதியா விமான நிலையத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புந்தேல்கண்ட் மற்றும் பகேல்கண்ட் பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, இரு விமான நிலையங்களிலும் நடைபெற்ற நேரடி நிகழ்ச்சிகள்  மூலம் கொண்டாடப்பட்டது.  உடான் திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விமானப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்கான மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டைக் குறிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

தாதியா விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு கலந்து கொண்டார்/ அதே நேரத்தில் சட்னா விமான நிலையத்தில் நடந்த நிகழ்வில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு. முரளிதர் மொஹோல் கலந்து கொண்டார். பிராந்திய போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், சிறந்த பயண அனுபவங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதார நடவடிஜிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உறுதியான செயல்பாடுகள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்வுகளில் மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் திரு மங்குபாய் சி. படேல், முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், துணை முதலமைச்சர்கள் திரு ராஜேந்திர சுக்லா மற்றும் திரு ஜகதீஷ் தேவ்தா, சிவில் விமானப் போக்குகாரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு சமீர் குமார் சின்ஹா, இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் திரு விபின் குமார், மற்றும் பிற மூத்த பிரமுகர்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133043

****

(Release ID: 2133043)

AD/SM/SV/RJ


(Release ID: 2133070)