சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கோவாவில் கண்காணிப்பு கோபுரங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டுகிறார்
Posted On:
21 MAY 2025 4:48PM by PIB Chennai
கோவாவில் உள்ள புதிய ஜுவாரி பாலத்தின் மேல் அமைக்கப்படவுள்ள அடையாள சின்னமாக விளங்க இருக்கும் கண்காணிப்பு கோபுரங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, மே 23, 2025 அன்று அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, திரு நிதின் கட்கரியின் முன்னோடி முயற்சி மற்றும் கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்தின் அர்ப்பணிப்புள்ள முயற்சிகள் அனைத்தும் இதைச் சாத்தியமாக்கியுள்ளன.
ரூ 270.07 கோடி செலவில் ஐந்து ஆண்டுகளில் கட்டப்படவுள்ள இந்தத் திட்டத்தில், பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் போன்று கண்காணிப்பு கோபுரங்கள் இடம்பெறும். சுழலும் உணவகம் மற்றும் கலைக்கூடத்துடன், இது உலகளாவிய சுற்றுலாத் தலமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. கோவாவின் வளமான சுற்றுலா நிலப்பரப்பில் ஒரு அடையாளச் சின்னமாக மாறத் தயாராக உள்ளது.
வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்குதல் மற்றும் பரிமாற்றம் மாதிரியில் செயல்படுத்தப்படும் இந்த முயற்சியால் அரசுக்கு நிதிச் சுமை இருக்காது. சலுகை வழங்குபவர் முழு கட்டுமானத்திற்கும் பொறுப்பாவார் மற்றும் 50 ஆண்டுகள் சலுகை காலத்திற்கு இதனை இயக்குவார். இரண்டு பைல் கேப் அஸ்திவாரங்களில் கோபுரங்களுக்கு இடையில் வைக்கப்படும் ஒவ்வொரு கோபுரமும் 125 மீட்டர் உயரத்திற்கு இருக்கும், 8.50 மீட்டர் x 5.50 மீட்டர் தண்டு பரிமாணங்களைக் கொண்டிருக்கும்.
மேல் மட்டங்களில் 22.50 மீட்டர் x 17.80 மீட்டர் குறைந்தபட்ச பரிமாணங்களைக் கொண்ட 2 விரிவான தளங்கள் இருக்கும், வெளியில் பார்க்கும் வகையில் காப்ஸ்யூல் மின்தூக்கி பொருத்தப்பட்டிருக்கும். பார்வையிடும் காட்சியகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் அதிநவீன சுற்றுலா வசதிகள் கொண்ட இந்தக் கோபுரங்கள், கடல் பகுதியில் இருபுறமும் 7.50 மீட்டர் அகலத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை பாலம் கட்டப்படும்.ஸஇது தடையற்ற சுற்றுலா அணுகலை அனுமதிக்கிறது. பாலத்தின் இரு முனைகளிலும் பார்க்கிங் வசதிகள் வழங்கப்படும், இது பார்வையாளர்களுக்கு வசதியை உறுதி செய்யும்.
இந்தத் திட்டம் கோவா முழுவதும் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை கணிசமாக ஊக்குவிக்கும் என்றும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இந்தியாவின் உள்கட்டமைப்பு தலைமையின் உலகளாவிய பிம்பத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் சில்லறை விற்பனை போன்ற துணைத் தொழில் பிரிவுகளை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் தொழில்முனைவோரை வளர்க்கும். மேலும், இது சர்வதேச வரைபடத்தில் கட்டிடக்கலை சுற்றுலா மற்றும் அனுபவப் பயணத்திற்கான முதன்மையான இடமாக கோவாவை நிலைநிறுத்தும்.
---
(Release ID: 2130255)
TS/PKV/KPG/DL
(Release ID: 2130336)
Visitor Counter : 3