உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குற்றவாளிகளை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பிடிக்க உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் - புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தெரிவித்தார்

Posted On: 19 MAY 2025 7:21PM by PIB Chennai

குற்றவாளிகளை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பிடிக்க உள்துறை அமைச்சகம் புதிய e-Zero FIR முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ்  பதிவில், தில்லிக்கு ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த புதிய அமைப்பு, ஆரம்பத்தில் ரூ 10 லட்சத்திற்கு மேலான  சைபர் நிதி குற்றங்களை தானாகவே எப்ஐஆர்-களாக மாற்றும்,. சைபர் குற்றவாளிகளை விரைவாகக் கட்டுப்படுத்தும் விசாரணைகளை மேற்கொள்ளும் புதிய அமைப்பு விரைவில் முழு நாட்டிற்கும் விரிவுபடுத்தப்படும். சைபர்-பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க மோடி அரசு சைபர் பாதுகாப்பு கட்டத்தை வலுப்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.

இது, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 'சைபர் பாதுகாப்பான இந்தியா' என்ற தொலைநோக்கை அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகும். சைபர் நிதி குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை மீட்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின்  சமீபத்திய மறுஆய்வுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இந்த முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளார்.

தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்டல் மற்றும் சைபர் குற்ற உதவி எண் 1930 ஆகியவை சைபர் நிதி குற்றம் தொடர்பான புகார்களை எளிதாகப் புகாரளிக்கவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும் உதவியுள்ளன.

இந்த முயற்சி என்சிஆர்பி/1930 புகார்களை எப்ஐஆர்-களாக மாற்றுவதை மேம்படுத்தும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை எளிதாக மீட்டெடுக்க முடியும். அத்துடன், சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்க உதவும். இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களின் விதிகளைப் பயன்படுத்துகிறது.

***

(Release ID: 2129715)
SM/PKV/RR/KR

 


(Release ID: 2129844)