வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு இ-சந்தை (ஜெம்) 8-வது ஆண்டைக் கொண்டாடியது

Posted On: 19 MAY 2025 5:00PM by PIB Chennai

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிர்வாகம் குறித்த மாற்றத்திற்கான தாக்கத்தை மறுஉறுதி செய்யும் வகையில் தேசிய அரசு கொள்முதல் இணையப் பக்கமான அரசு இ-சந்தை (ஜெம்) அதன் 8-வது ஆண்டைக் கொண்டாடியது.

இந்த நிகழ்வையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அரசு இ-சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு மிதிர் குமார், எம்எஸ்எம்இ-க்கள் தொடங்கி புத்தொழில்கள், நெசவாளர்கள், பெண்கள் தலைமையிலான  தொழில் நிறுவனங்கள் வரை அரசு இ-சந்தையின் பயணம் கொள்முதலுக்கு அப்பாலும் தொடர்கிறது என்றார். மிகவும் எளிதான அணுகுதலுடன், திறனுடையதாகவும், அனைவருக்கும் சமத்துவமான சந்தை இடமாகவும் இருப்பதை இது கட்டமைத்துள்ளது.

அண்மை ஆண்டுகளில் இந்த இணையப்பக்கத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் 1.64 லட்சம் முதன்மை வாங்குவோரும், 4.2 லட்சம் விற்போரும் உள்ளனர். இந்த இணைய தளம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொருள் வகைகளையும் 330-க்கும் அதிகமான சேவைகளையும் கொண்டுள்ளது.

10 லட்சத்திற்கும் அதிகமான எம்எஸ்எம்இ-க்களும் 1.3 லட்சம் கைவினைக்கலைஞர்கள் மற்றும் நெசவாளர்களும், 1.84 லட்சம் பெண் தொழில்முனைவோரும், 31,000 புத்தொழில்களும் அரசு இ-சந்தையின் அங்கமாக உள்ளனர் என்று திரு குமார் தெரிவித்தார்.

 ஜெம் மூலமான அனைத்து பரிவர்த்தனைகளிலும் சுமார் 97 சதவீதம் தற்போது கட்டணமில்லாத பரிவர்த்தனைகளாக உள்ளன என்று அவர் கூறினார். மேலும் ரூ 10 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஆர்டர்களுக்கான கட்டணம் ஏற்கனவே இருந்த ரூ. 72.5 லட்சம் என்பதிலிருந்து ரூ. 3 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கு குறைவாக வருடாந்தர விற்பனை உள்ள விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை வைப்பு தொகை 60 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவு செய்யப்பட்ட  குழுக்களுக்கு முழுவிலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அரசு இ-சந்தையை ஏற்றுக்கொண்டுள்ளநிலையில், உத்தரப்பிரதேசம் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரா, மணிப்பூர், குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்கள் ஜெம் பயன்பாட்டை கட்டாயமாக்கியுள்ளன என்று திரு குமார் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129647

***

TS/SMB/AG/DL


(Release ID: 2129676)