தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: ஆற்றல் ஆக்கம்

ஆயுதப்படைகளின் ஒருங்கிணைந்த வலிமை

Posted On: 18 MAY 2025 5:42PM by PIB Chennai

அச்சுறுத்தல்கள் வேகமாக உருவாகும் போர் யுகத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பின் வலிமை நிரூபிக்கப்பட்டுள்ளது. 26 அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மே 7, 2025 அன்று தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், துல்லியம், தொழில்முறை செயல்பாடு, சரியான நோக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பதிலடியாக அமைந்ததுபாகிஸ்தானுக்குள் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதற்கான இலக்கு நோக்கிய செயலாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது.

இந்தியாவின் நடவடிக்கையானது நுணுக்கமான திட்டமிடல் மற்றும் உளவுத்துறை தலைமையிலான அணுகுமுறையின் அடிப்படையில் அமைந்ததுஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய விமானப்படை தளங்கள், தளவாட உள்கட்டமைப்பை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியது. இருப்பினும், இந்த முயற்சிகள் இந்தியாவின் விரிவான, பல அடுக்கு வான் பாதுகாப்பு கட்டமைப்பால் திறம்பட முறியடிக்கப்பட்டன. இந்த வெற்றிக்கு மையமாக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு உத்தி (ICCS) இருந்தது.

இந்த நடவடிக்கை நிலம், வான் மற்றும் கடல் முழுவதும் விரிவடைந்து இருந்தது. இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு இடையிலான சிறப்பான ஒருங்கிணைப்பு வெளிப்பட்டது. பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு எதிராக துல்லியமான தாக்குதல்களை நடத்துவதில் இந்திய விமானப்படை (IAF) முக்கிய பங்கு வகித்தது.

அதே நேரத்தில், ராணுவம் தற்காப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் அதன் தயார்நிலை மற்றும் செயல்திறனை நிரூபித்தது. பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோன்கள், வெடிமருந்துகளின் அலைகளை முறியடிப்பதில் ராணுவப் பிரிவுகள் முக்கிய பங்கு வகித்தன. சேதத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் இடைவிடாத முயற்சிகள் இருந்தபோதிலும், ராணுவம் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு இரண்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் இந்தியப் படைகள் வெற்றி பெற்றன.

இந்திய கடற்படை, இந்த நடவடிக்கையின் போது கடல்சார் திறனை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகித்ததுகடல்சார் களத்தில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை உடனடியாக அடையாளம் காண்பதை கடற்படை உறுதி செய்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​எல்லை பாதுகாப்புப் படை (BSF) ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அதிகாலையில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை பிஎஸ்எஃப் படையினர் கவனித்து விரைவாக தடுத்தனர்.

ஆபரேஷன் சிந்தூர் வெறும் வெற்றி மட்டுமல்ல. இது இந்தியாவின் உயர் துல்லியம், நிலம், வான் மற்றும் கடல் முழுவதும் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைக்கான திறனை நிரூபித்துள்ளது. பாதுகாப்புத் தயார்நிலையில் பல ஆண்டுகளாக முதலீடு செய்ததாலும், மத்திய அரசின் அசைக்க முடியாத கொள்கை மற்றும் நிதி ஆதரவாலும் இந்த நடவடிக்கை சாத்தியமானது.

மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129453

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107177

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2023710

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1597425

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2057584

https://mod.gov.in/sites/default/files/AR_0.pdf

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2021210

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2122831

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2106207

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2089184

https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=198903

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1601812

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708998

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2017419

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128748

https://ddnews.gov.in/en/indian-armed-forces-conduct-tri-services-exercise-prachand-prahar/

https://ddnews.gov.in/en/akash-missile-iaccs-and-drones-drive-indias-defence-success-in-operation-sindoor/

https://www.mea.gov.in/mediabriefings.htm?dtl/39474/Transcript+of+Special+Briefing+on+OPERATION+SINDOOR+May+07+2025

https://www.mea.gov.in/mediabriefings.htm?dtl/39482/Transcript_of_Special_briefing_on_OPERATION_SINDOOR_May_09_2025

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/178/AU4977.pdf?source=pqals

https://ddnews.gov.in/en/bsf-foils-major-infiltration-bid-along-international-border-in-samba/

https://www.mod.gov.in/sites/default/files/0201202402.pdf

https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=146663

****

(Release ID: 2129453)

TS/PLM/SG

 

 


(Release ID: 2129468)
Read this release in: English , Urdu , Hindi