உள்துறை அமைச்சகம்
சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லையை ஒட்டியுள்ள கரேகுட்டா மலைகளில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது காயமடைந்த பாதுகாப்புப் படையினரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா சந்தித்தார்
Posted On:
15 MAY 2025 7:38PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இன்று தில்லியில் உள்ள எய்ம்ஸ் விபத்துப் பிரிவிற்குச் சென்று, சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லையில் உள்ள கரேகுட்டா மலைகளில் 31 நக்சலைட்டுகளை அழிக்கும் நடவடிக்கையின் போது காயமடைந்த பாதுகாப்புப் படையினரைச் சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு ஷா தெரிவித்ததாவது:
“நமது பாதுகாப்புப் படையினர் தங்கள் வீரத்தால் நக்சலிசத்தின் ஒவ்வொரு தடயத்தையும் துடைத்து வருகின்றனர். இன்று, தில்லியில் உள்ள எய்ம்ஸ் விபத்துப் பிரிவிற்குச் சென்று, சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லையில் உள்ள கரேகுட்டா மலைகளில் 31 நக்சலைட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையின் போது காயமடைந்த பாதுகாப்புப் படையினரைச் சந்தித்தேன். அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து, தேசம் அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் பெருமிதத்தையும் எடுத்துரைத்தேன்.”
சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் வீரர்கள் 21 நாட்கள் தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு 31 நக்சலைட்டுகளைக் கொன்றதாக திரு. அமித் ஷா கூறினார். இந்த வீரர்களின் துணிச்சலையும், மன உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
***
SM/RB/DL
(Release ID: 2128933)