கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் 2024-25 நிதியாண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களை எட்டியுள்ளன

Posted On: 13 MAY 2025 11:59AM by PIB Chennai

இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. 2024-25 நிதியாண்டானது சரக்கு கையாளுதல், செயல்பாட்டுத் திறன் மற்றும் உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மைல்கல் ஆண்டாக உருவெடுத்துள்ளது.

2024-25 நிதியாண்டில், பெரிய துறைமுகங்கள் சரக்கு கையாளுதலில் 4.3% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. கையாளப்பட்ட சரக்கு அளவு 2023-24 நிதியாண்டில் 819 மில்லியன் டன் என்பதிலிருந்து 2024-25 நிதியாண்டில் 855 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. வளர்ந்துவரும் வர்த்தக அளவுகளுக்கு ஏற்ப பெரிய துறைமுகங்களின் மீள்தன்மை மற்றும் திறனை இந்த அதிகரிப்பு எடுத்துக்காட்டுகிறது. போக்குவரத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு, அதிகக் கொள்கலன் உற்பத்தி (10%), உர சரக்கு கையாளுதல் (13%),  பிஓஎல் சரக்கு கையாளுதல் (3%) மற்றும் இதர பொருட்கள் கையாளுதல் (31%) ஆகியவற்றால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2024-25 நிதி ஆண்டில் பெரிய துறைமுகங்களில் கையாளப்படும் பொருட்களில், பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய்  - கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எல்பிஜி/எல்என்ஜி உட்பட - 254.5 மில்லியன் டன்கள் (29.8%), அதைத் தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து 193.5 மில்லியன் டன்கள் (22.6%) மற்றும் நிலக்கரி 186.6 மில்லியன் டன்கள் (21.8%), மற்றும் இரும்புத் தாது, துகள்கள், உரங்கள் மற்றும் பல போன்ற பிற சரக்கு வகைகள் கையாளப்பட்டு உள்ளன.

பெரிய துறைமுகங்களின் வரலாற்றில் முதல்முறையாக, பாரதீப் துறைமுக ஆணையம்  மற்றும் தீன்தயாள் துறைமுக ஆணையம் ஆகியன 150 மில்லியன் டன் சரக்கு கையாளும் குறியீட்டைத் தாண்டி, கடல்சார் வர்த்தகம் மற்றும் செயல்பாட்டு சிறப்பின் முக்கிய மையங்களாக தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளன. இதற்கிடையில், ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம்  7.3 மில்லியன் டிஇயு- களைக் கையாண்டு சாதனை படைத்தது, இது ஆண்டுக்கு ஆண்டு என்ற முறையில் 13.5% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

2024-25 நிதியாண்டில், இந்திய துறைமுகங்கள் துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கலுக்காக கூட்டாக 962 ஏக்கர் நிலத்தை ஒதுக்கின, இது 2024-25 நிதியாண்டில் ரூ 7,565 கோடி வருமானத்தை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், குத்தகைதாரர்கள் ஒதுக்கப்பட்ட நிலத்தில் ரூ 68,780 கோடி எதிர்கால முதலீடுகளைச் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த மாற்றத்தில் தனியார் துறை பங்களிப்பு முக்கிய இடம் வகிக்கிறது, பெரிய துறைமுகங்களில் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு திட்டங்களில் முதலீடுகள் மூன்று மடங்கு அதிகரித்து, 2022-23 நிதியாண்டில் ரூ 1,329 கோடியிலிருந்து 2024-25 நிதியாண்டில் ரூ 3,986 கோடியாக உயர்ந்துள்ளது, இது வலுவான முதலீட்டாளர் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

துறைமுகங்களின் கையாளுதல் திறன் அதிகரித்துள்ளது குறித்து,  மகிழ்ச்சியையும் பெருமையையும் வெளிப்படுத்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால்

"இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் 2024-25 நிதியாண்டில் அடைந்த குறிப்பிடத்தக்க சாதனைகள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இது இந்தியாவின் கடல்சார் துறையில் நமது  பிரதமரின் மாற்றத்திற்கான தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்திற்கு சான்றாக நிற்கிறது" எனக் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128329

 

***

TS/PKV/RR


(Release ID: 2128362)