WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் என்பது கூட்டுப்பணியாளர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த தளம்: ஹிமேஷ் ரேஷ்மியா

 प्रविष्टि तिथि: 04 MAY 2025 5:46PM |   Location: PIB Chennai

வேவ்ஸ் 2025 உச்சிமாநாட்டின் மூன்றாவது நாளன்று, "இந்திய இசையை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லுதல்" என்ற தலைப்பில் ஒரு முக்கிய அமர்வு நடைபெற்றது.  இதில் இந்திய இசையின் உலகளாவிய எழுச்சி மற்றும் வரவிருக்கும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்க தொழில்துறையைச் சேர்ந்த  தொலைநோக்குப் பார்வையாளர்கள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களின் உயர் அதிகாரம் கொண்ட குழு கலந்து கொண்டது.

 

இந்த அமர்வில் இந்திய மற்றும் சர்வதேச இசைத் துறைகளைச் சேர்ந்த மிகவும் போற்றப்படும் சில ஆளுமைகள் ஒன்றிணைந்தனர், அவர்கள் கலைஞர்களின் மேம்பாடு, இசை வெளியீடு, டிஜிட்டல் வளர்ச்சி, சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 

புகழ்பெற்ற பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான ஹிமேஷ் ரேஷ்மியா, வேவ்ஸ் 2025 ஐ சக கூட்டாளர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களுக்கான ஒரு சக்திவாய்ந்த தளமாக விவரித்தார். புதியவர்களுக்கான தயாரிப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், அவர்களின் இசை படைப்புகளை மெருகூட்டி எப்போதும் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தினார். தனது சொந்த பயணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்போது, ​​கடந்த காலத்தில் குறைந்த வாய்ப்புகள் இருந்தபோதிலும், இன்றைய ஆர்வமுள்ள கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சுயாதீனமான தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், மிக முக்கியமான காரணி, இசையின் தரம் என்று அவர் வலியுறுத்தினார்.  பார்வையாளர்களுடன் உண்மையிலேயே இணைவதற்கும் துறையில் ஒரு முத்திரையைப் பதிப்பதற்கும் இசையானது, அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும்,  மெல்லிசையாகவும் இருக்க வேண்டும், என்று அவர் அறிவுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126801

 

 

(Release ID: 2126801)

 

 

***


रिलीज़ आईडी: 2126923   |   Visitor Counter: 27

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Urdu , Nepali , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada