WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

“கடந்த கால ஏக்கங்களுக்கு அப்பால்: மீட்டெடுக்கப்பட்ட பழைய தரமான திரைப்படங்களின் வணிகம்” என்ற தலைப்பில் வேவ்ஸ் உச்சிமாநாட்டில் விவாதம் நடைபெற்றது

 Posted On: 03 MAY 2025 6:18PM |   Location: PIB Chennai

"கடந்த கால ஏக்கங்களுக்கு அப்பால்: மீட்டெடுக்கப்பட்ட பழைய தரமான திரைப்படங்களின் வணிகம்” என்ற தலைப்பில் ஒரு நுண்ணறிவுமிக்க குழு விவாதம் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் நடைபெற்றது.புகழ்பெற்ற திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷின் நெறிப்படுத்துதலின் கீழ் நடத்தப்பட்ட இந்த அமர்வில், பாரம்பரிய கலை சினிமாவை மீட்டெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

திரைப்பட கண்காட்சிகளிலும் விநியோகத் துறையிலும் முக்கியப் பங்கு வகிக்கும் கமல் கியான்சந்தானியின்உரையுடன் நிகழ்வு தொடங்கியது. அவர் பழைய தரமான (கிளாசிக்) படங்களை டிஜிட்டல் தளங்களில் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்தினார். நமது பல படங்கள் உடனடியாகக் கிடைக்காததால் பொது நினைவிலிருந்து அவை மறைந்து வருகின்றன என்று அவர்  கூறினார். ஏராளமானோர் பழைய தரமான (கிளாசிக்) படங்களைப் பார்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். புதிய உள்ளடக்கங்கள் அதிகம் உள்ளபோதிலும், இந்த திரைத் தொழில்துறை அதன் அடித்தளப் படைப்புகளைப் பாதுகாக்கப் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி பார்வையாளர்களின் விருப்பங்கள் பல வகையாக உள்ளன என்று எடுத்துரைத்தார். மக்களின் நேரம் விலைமதிப்பற்றது எனவும் அவர்கள் தரமான உள்ளடக்கத்தை விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அகமதாபாத் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் பிரகாஷ் மக்தம் பேசுகையில், இந்தியாவின் சினிமா மரபைப் பாதுகாக்க அரசு எடுக்கும் முயற்சிகளை எடுத்துக் கூறினார். சினிமா பொக்கிஷங்களைப் பாதுகாத்தல், டிஜிட்டல் மயமாக்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட அரசின் முயற்சியான தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கம் பற்றி அவர் விரிவாகக் கூறினார். கிளாசிக் எனப்படும் மரபு சார்ந்த பழைய தரமான படங்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல எனவும் அவை நமது கூட்டு கலாச்சார அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாரம்பரிய பழைய தரமான படங்கள் வெறும் கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள் அல்ல. மாறாக அவை கலாச்சாரம், மரபு ஆகியவற்றின் சக்திவாய்ந்த அடையாளம் என்பதை இந்த அமர்வு நினைவூட்டியது. இவற்றின் வணிகம் மீட்டெடுக்கப்பட்டு அது வேகமெடுக்கும் போது, ​​இந்தியாவின் சினிமா பாரம்பரியம் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்பது தெளிவாகிறது.

வேவ்ஸ் உச்சிமாநாடு தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடரலாம்:

 

எக்ஸ்:

https://x.com/WAVESummitIndia

https://x.com/MIB_India

https://x.com/PIB_India

https://x.com/PIBmumbai

இன்ஸ்டாகிராம்:

https://www.instagram.com/wavesummitindia

https://www.instagram.com/mib_india

https://www.instagram.com/pibindia

****

Release ID: 2126525

TS/PLM/RJ


Release ID: (Release ID: 2126591)   |   Visitor Counter: 11