பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 03 MAY 2025 6:26PM by PIB Chennai

ஆஸ்திரேலிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

"ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அந்தோணி அல்பானீஸ் அவர்களே, உங்களது மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்கள்! இந்த உறுதியான தீர்ப்பு, உங்கள் தலைமையின் மீது ஆஸ்திரேலிய மக்கள் வைத்திருக்கும் நீடித்த நம்பிக்கையைக் குறிக்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கான நமது பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லவும் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.''

****

(Release ID: 2126526)

TS/PKV/RJ


(Release ID: 2126579) Visitor Counter : 24