WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் 2025: ஸ்பாட்டிஃபை ஹவுஸ் அமர்வு நாட்டுப்புற இசைப் பாரம்பரியத்தை வாழும் பாரம்பரியமாக எடுத்துக்காட்டியது

 Posted On: 03 MAY 2025 3:34PM |   Location: PIB Chennai

வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-ன் மூன்றாம் நாளான இன்று மும்பையில் உள்ள ஜியோ மாநாட்டு மையத்தில் இசை செயலி தளமான ஸ்பாட்டிஃபை-யின் பங்களிப்புடன் "ஸ்பாட்டிஃபை ஹவுஸ்: இந்தியாவில் நாட்டுப்புற இசையின் பரிணாமம்" என்ற தலைப்பில்  விவாத அமர்வு நடைபெற்றது. வேவ்ஸ் கலாச்சார, இசை நிகழ்ச்சிகள் பிரிவின் கீழ் நடத்தப்பட்ட இந்த அமர்வு, இந்தியாவின் நாட்டுப்புற இசையின் முன்னணிக் குரல்களை ஒன்றிணைத்து  பாரம்பரியம் குறித்த உரையாடலை நடத்தியது.

 

புகழ்பெற்ற கதைசொல்லியும் தொகுப்பாளருமான ரோஷன் அப்பாஸ் விவாதத்தை நெறிப்படுத்தினார். புகழ் பெற்ற பாடலாசிரியரும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவருமான பிரசூன் ஜோஷி, நாட்டுப்புற பாடகி மாலினி அவஸ்தி, இசையமைப்பாளர் நந்தேஷ் உமாப், பாடகரும் இசையமைப்பாளருமான பாபோன், புகழ்பெற்ற கலைஞர் இலா அருண் உள்ளிட்டோர் அமர்வில் உரையாளர்களாகப் பங்கேற்றனர்.

 

இந்திய நாட்டுப்புற இசை எவ்வாறு உயிரோட்டத்துடன், கூட்டு பாரம்பரியமாக தொடர்ந்து செழித்து வளர்கிறது என்பதை குழு உறுப்பினர்கள் விவாதித்தனர். நாட்டுப்புற இசை என்பது பல தலைமுறைகளாக கலாச்சாரத்தைக் கடத்தும் ஒரு சக்தி என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர்.

 

இந்த உரையாடலில் நாட்டுப்புற இசையை பிரதான நீரோட்டத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஸ்பாட்டிஃபை போன்ற இசை தளங்கள், வேவ்ஸ்  முன்முயற்சிகள் போன்றவை நாட்டுப்புற இசையை ஊக்குவித்து வருவதற்கு குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

இந்தியாவின் நாட்டுப்புற இசைப் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தி அதை ஊக்குவிப்பதற்கு, ரசிகர்கள், நிறுவனங்கள், படைப்பாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற அழைப்போடு இந்த அமர்வு நிறைவடைந்தது. நாட்டுப்புற இசையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதைக் கொண்டாடவும், பரவலாகப் பிரபலப்படுத்தவும் வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

****

Release ID: 2126464

TS/PLM/RJ


Release ID: (Release ID: 2126489)   |   Visitor Counter: 15