WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஏவிஜிசி-எக்ஸ்ஆர் பிரிவில் இந்தியா உலகளாவிய தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது: ஐஐசிடி நிறுவனம், தொழில்துறையினருடன் இணைந்து செயல்படவுள்ளது

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இந்தியாவை உலகளாவிய முன்னணி நாடாக மாற்றுவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை ஐஐசிடி நிறுவனம் பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

 Posted On: 03 MAY 2025 2:36PM |   Location: PIB Chennai

அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், டிஜிட்டல் விளையாட்டு, சித்திரக்கதை- மேம்படுத்தப்பட்ட உண்மைத் தன்மை ஆகியவற்றைக் குறிக்கும் ஏவிஜிசி - எக்ஸ்ஆர் (AVGC-XR) சூழல் அமைப்பை இந்தியாவில் மேம்படுத்துவதற்கான மிகப் பெரும் நடவடிக்கையாக, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது இந்தியத் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு (ஃபிக்கி - FICCI), இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ - CII) ஆகியவற்றுடன் இணைந்து, ஏவிஜிசி - எக்ஸ்ஆர் துறைக்கென்றே பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேசிய சிறப்பு மையமான இந்திய படைப்பாக்க தொழில்நுட்ப நிறுவனத்தை (IICT - ஐஐசிடி) தொடங்கியுள்ளது.

 

இந்த நிகழ்வில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு, தொழில் நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். ஊடகம் - பொழுதுபோக்கு துறையில் உலகளாவிய முன்னணி நாடாக மாறுவதற்கான இந்தியாவின் திறனை அவர் எடுத்துரைத்தார். தொழில்நுட்பக் கல்வியில் ஐஐடி-கள் போலவும்,  மேலாண்மை கல்வியில் ஐஐஎம்-கள் போலவும், ஊடக - பொழுதுபோக்குத் துறையில் ஐஐசிடி முதன்மையான நிறுவனமாக பரிணமிக்கும் என்றும் அவர் கூறினார்.

 

திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் முற்றிலும் புதுமையான ஒரு முயற்சியை அரசு தொடங்கியுள்ளது என அவர் கூறினார். பாடத்திட்ட மேம்பாடு, பயிற்சிகள், உதவித்தொகைகள், தொடக்க நிதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆதரவு வழங்க, முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் ஐஐசிடி-யுடன் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

 

மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர்  திரு தீரேந்திர ஓஜா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வேவ்ஸ் உச்சிமாநாடு தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடரலாம்:

 

எக்ஸ்:

https://x.com/WAVESummitIndia

https://x.com/MIB_India

https://x.com/PIB_India

https://x.com/PIBmumbai

 

இன்ஸ்டாகிராம்:

https://www.instagram.com/wavesummitindia

https://www.instagram.com/mib_india

https://www.instagram.com/pibindia

****

Release ID: 2126452

TS/PLM/RJ


Release ID: (Release ID: 2126483)   |   Visitor Counter: 16