WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

படைப்பு உள்ளடக்கங்களின் திருட்டைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை - வேவ்ஸ் உச்சிமாநாட்டில் நிபுணர்கள் வலியுறுத்தல்

 Posted On: 03 MAY 2025 2:51PM |   Location: PIB Chennai

“படைப்புகளின் திருட்டு: தொழில்நுட்பம் மூலம் உள்ளடக்கங்களைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் ஒரு குழு விவாதம் நடைபெற்றது. டிஜிட்டல் உள்ளடக்கப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றான இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற இந்த விவாதத்தில் ஊடகங்கள், சட்டம், இணையதளப் பாதுகாப்பு ஆகிய துறைகள் சார்ந்த உலகளாவிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  ஐபி ஹவுஸ் நிறுவனத்தின ஆசிய பசிபிக் பிரிவு துணைத் தலைவர் திரு நீல் கேன் இந்த விவாதத்தை நெறிப்படுத்தினார்.  இந்த உரையாடலில் படைப்புத் திருட்டு (பைரசி -Piracy) என்பது ஒரு முக்கிய அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டது.

 

மீடியா பார்ட்னர்ஸ் ஆசியா நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர் விவேக் கோட்டோ பேசுகையில், கட்டுப்படுத்தப்படாத உள்ளடக்கத் திருட்டுகளால், உரிமம் பெற்றவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் சுட்டிக் காட்டினார்.  திருட்டு எதிர்ப்பு அமலாக்க நடைமுறைகள் மூலம் இதைத்  திறமையாகத் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். 

 

ஐஎஸ்பி தரவு அறிவியல் நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஸ்ருதி மந்திரி, டிஜிட்டல் திருட்டு, இணைய தள குற்றம் ஆகியவற்றின் தீய விளைவுகளை எடுத்துரைத்தார். ஜூலை 9–10 தேதிகளில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, இன்டர்போல் ஆகியவற்றுடன் இணைந்து ஐஎஸ்பி நிறுவனம் டிஜிட்டல் திருட்டு தடுப்பு உச்சி மாநாட்டை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.

 

ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் சட்டப் பிரிவுத் தலைவர் திரு அனில் லேல், வலுவான சட்ட அமலாக்கத்தின்  முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஆனந்த் அண்ட் ஆனந்த் அசோசியேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரவீன் ஆனந்த், தொழில்நுட்பம், வலுவான சட்டங்கள் இரண்டின் மூலமும் தீர்வை ஏற்படுத்த முடியும் என்றார்.

 

டிஜிட்டல் உள்ளடக்கத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தொழில்நுட்பம், சட்டம், அமலாக்க முகமைகள், பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முக்கியத்துவத்தை இந்த விவாதம் முன்னிலைப்படுத்தியது.

 

வேவ்ஸ் உச்சிமாநாடு தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடரலாம்:

 

எக்ஸ்:

https://x.com/WAVESummitIndia

https://x.com/MIB_India

https://x.com/PIB_India

https://x.com/PIBmumbai

இன்ஸ்டாகிராம்:

https://www.instagram.com/wavesummitindia

https://www.instagram.com/mib_india

https://www.instagram.com/pibindia

****

Release ID: 2126455)  

TS/PLM/RJ


Release ID: (Release ID: 2126482)   |   Visitor Counter: 16