தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் - உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் முதல் பதிப்பிற்கான கவுண்டவுன் தொடங்கியது
प्रविष्टि तिथि:
30 APR 2025 4:46PM
|
Location:
PIB Chennai
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேவ்ஸ் (உலக ஒலி-ஒளி & பொழுதுபோக்கு உச்சிமாநாடு 2025) என்ற மைல்கல் நிகழ்வுக்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நாளை தொடங்கும் இந்த நான்கு நாள் நிகழ்வு, இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையை இன்னும் உயரத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொழுதுபோக்குத் தலைநகரான மும்பை, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த அனைவரையும் வரவேற்கத் தயாராகி வரும் நிலையில், அவர்கள் குழு விவாதங்கள், சிந்தனையைத் தூண்டும் மற்றும் ஊக்கமளிக்கும் சொற்பொழிவுகள், அறிவைப் பகிர்ந்து கொள்ளும் உரையாடல் மற்றும் ஊடாடும் அமர்வுகள், தொழில்துறை பிரபலங்கள் போன்றவர்களின் வளப்படுத்தும் மாஸ்டர்-வகுப்புகள் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். வரும் நான்கு நாட்களில் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் பல பரிமாண எடுத்துக்காட்டுகள் நாட்டில் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு நம்பிக்கைக்குரியதாகத் தெரிகின்றன.
ஏனென்றால், வேவ்ஸ் உச்சிமாநாடு, உலகளாவிய சக்தி மையமாக இந்தியாவின் குரலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேவ்ஸ், அதன் அறிமுக ஆண்டிலிருந்தே, இந்தியாவின் துடிப்பான படைப்புத் துறையையும், உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சூழலில் அதன் மகத்தான ஆற்றலையும் வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கும். அதனுடன் சேர்த்து, வேவ்ஸ் இந்திய மற்றும் உலகளாவிய பங்குதாரர்களிடையே அறிவு பரிமாற்றம், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இந்த முன்னோடி முயற்சி, உலகளாவிய நல்லிணக்கத்திற்காக இந்தியாவின் வளமான ஆன்மீக மரபை ஆதாயத்துடன் பயன்படுத்திக் கொள்ளவும், படைப்பாளரின் பொருளாதாரத்தை சரியான திசையில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் படைப்பாற்றல் வலிமையைப் பெரிதுபடுத்தவும், உள்ளடக்க உருவாக்கம், அறிவுசார் சொத்துரிமை மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மையமாக அதன் நிலையை விரிவுபடுத்தவும் வேவ்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒலிபரப்பு, அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, திரைப்படங்கள், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், ஒலி மற்றும் இசை, விளம்பரம், டிஜிட்டல் மீடியா, சமூக ஊடக தளங்கள், ஜெனரேட்டிவ் ஏஐ, ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125495
*****
RB/DL
रिलीज़ आईडी:
2125630
| Visitor Counter:
41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
हिन्दी
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam