தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் 2025-ல் கற்றலுக்கு புதிய கண்டுபிடிப்பு : கையடக்க சாதன வடிவமைப்பு போட்டிகளில் இந்திய டிஜிட்டல் கேமிங் சொசைட்டியின் இறுதிப் போட்டியாளர்கள்
Posted On:
27 APR 2025 4:53PM
|
Location:
PIB Chennai
கற்றலுக்கு புதிய கண்டுபிடிப்பு : கையடக்க சாதன வடிவமைப்பு போட்டிகளின் முதல் 10 இறுதிப் போட்டியாளர்களை இந்திய டிஜிட்டல் கேமிங் சொசைட்டி அறிவித்துள்ளது. வரவிருக்கும் உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ் ) 2025-ன் ஒரு பகுதியாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய டிஜிட்டல் கேமிங் சொசைட்டி ஏற்பாடு செய்யும் இந்தப் போட்டி, தொழில்நுட்பம், கல்வி, கேமிங் ஆகியவற்றில் இளைஞர்களிடையே புதுமைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கற்றல் அனுபவங்களில் புரட்சியை ஏற்படுத்தும் கையடக்க சாதனங்களுக்கான திருப்புமுனை யோசனைகள் மற்றும் வடிவமைப்பை ஊக்குவிக்கிறது.
தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் அடங்கிய நடுவர் குழுவின் கடுமையான மதிப்பீட்டிற்குப் பின், 1856 பேர் புதுமையான யோசனைகளைப் பதிவுசெய்ததிலிருந்து முதல் 10 இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடுவர் குழுவில் எருடிட்டியோவின் இணை நிறுவனர் திரு இந்திரஜித் கோஷ்; ஹுயோனின் இண்டா மற்றும் சார்க் நாட்டின் மேலாளர் திரு ராஜீவ் நாகர்; ஸ்க்விட் அகாடமியின் இணை நிறுவனர் மற்றும் தயாரிப்புத் தலைவர் திரு ஜெஃப்ரி க்ரே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இறுதிப் போட்டியாளர்களில் 10 பேர்:
1. கர்நாடகா பர்வா - கோட் கிராஃப்ட் ஜூனியர் (கர்நாடகா)
2. வித்யார்த்தி - குழந்தைகளுக்கான நவீன கற்றல் டேப்லெட்: ஒரு இருவழித் தொடர்புடைய மற்றும் தகவமைப்பு கல்வி துணை (கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம்)
இளம் கண்டுபிடிப்பாளர்கள் நவீன கற்றல் டேப்லெட்டை உருவாக்கியுள்ளனர் - இது இஎஸ்பி8266 அல்லது ராஸ்பெர்ரி பை மூலம் இயக்கப்படும் குறைந்த விலையுள்ள, குரல் உதவியுடன் கூடிய, இருவழித் தொடர்புடைய கல்வி சாதனமாகும். குழந்தைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த டேப்லெட், அதிக செலவுகள் மற்றும் இணைப்புத் தடைகள் காரணமாக பெரும்பாலும் அணுக முடியாத பாரம்பரியமான மற்றும் டிஜிட்டல் கற்றல் கருவிகளுக்கு மாற்றாக திரை இல்லாத, இணையம் இல்லாத சாதனத்தை வழங்குகிறது.
3. டெக் டைட்டன்ஸ் - இருவழித் தொடர்புடைய, எழுத்து உதவியுடன் கூடிய நவீன கையெழுத்து கற்றல் சாதனம் (தமிழ்நாடு)
பாரம்பரிய எழுத்து முறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் கலப்பதன் மூலம், நவீன கையெழுத்து கற்றல் சாதனம் குழந்தைகள் எழுதக் கற்றுக்கொள்வதை மாற்றியமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் நிகழ்நேர இருவழித் தொடர்பு கருத்து, பன்மொழி கற்றல் அனுபவம், ஆஃப்லைன், குறைந்த விலையில் தீர்வு ஆகியவற்றை வழங்குகிறது, குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் ஆரம்பகால கற்பவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. புரோட்டோமைண்ட்ஸ் - எடுஸ்பார்க் (டெல்லி, கேரளா, உ.பி., பீகார்)
எடுஸ்பார்க் என்பது 6 முதல் 8 வயது வரையிலான இளம் குழந்தைகளில் ஆர்வத்தைத் தூண்டவும் அறிவாற்றல் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட மலிவு விலையில், ஏஐ-ஆல் இயங்கும் கையடக்க சாதனமாகும். குழந்தைகள் சுடோகு மற்றும் கணித சவால்கள் முதல் நினைவக புதிர்கள் வரை கல்வி விளையாட்டுகளை விளையாடும்போது, நிகழ்நேரத்தில் சிரமத்தை சரிசெய்து, ஒவ்வொரு கற்பவரும் அவரவர் வேகத்தில் முன்னேற இந்த சாதனம் உதவுகிறது.
5. அபெக்ஸ் சாதனையாளர்கள் - போட்மாஸ் (BODMAS) தேடல்: சிறந்த கல்விக்கான கேமிஃபைட் கணித கற்றல் (தமிழ்நாடு)
போட்மாஸ் (அடைப்புக்குறிகள், வரிசைகள், வகுத்தல்/பெருக்கல், கூட்டல்/கழித்தல்) பெரும்பாலும் இளம் கற்பவர்களுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது. கணிதத்தில் அவர்களின் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தை மெதுவாக்குகிறது. போட்மாஸ் தேடல் கற்றலை ஒரு ஆழமான, வெகுமதி அடிப்படையிலான பயணமாக மாற்றுவதன் மூலம் அதை மாற்றுகிறது.
6. சயின்ஸ்வெர்ஸ் - குழந்தைகளுக்கான கையடக்க கல்வி சாதனம் (இந்தோனேசியா)
7. வி20- விஃபிட் - விளையாட்டு மூலம் கற்றல் (தமிழ்நாடு)
8. போர்வீரர்கள்- மகா-சாஸ்திரம் (தேஹி)
மகா-சாஸ்திரம் என்பது 5 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை மறுவடிவமைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான கல்விச் சூழல் அமைப்பாகும். . உள்ளடக்கம் மற்றும் அளவிடுதலுக்காக உருவாக்கப்பட்ட இந்த தளம், இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள கற்பவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய வினாடி வினாக்கள், நிகழ்நேர உருவகப்படுத்துதல்கள், ஏஐ இயங்கும் பயிற்சி மற்றும் பன்மொழி ஆதரவை ஒருங்கிணைக்கிறது.
9.கிட்டிமைத்ரி- ஒரு கையடக்க கணித கேமிங் சாதனம் (மும்பை, ஒடிசா, கர்நாடகா)
தேர்வு செய்யப்பட்ட இந்திய மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எண் கணிதத்தில் உலகளாவிய குறைந்தபட்ச தரநிலைகளுக்குக் கீழே உள்ளனர். இந்த முக்கியமான சவாலை அங்கீகரித்து, கிட்டிமைத்ரி குழு தேசிய கல்விக் கொள்கை 2020 இலிருந்து உத்வேகம் பெற்று, உண்மையிலேயே உள்ளூர் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கற்றல் தீர்வை உருவாக்க தாய்மொழி கற்றல், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் பாரம்பரிய இந்திய மதிப்புகளில் கவனம் செலுத்தியது.
10. இ-க்ரூட்ஸ்- மைக்ரோ கன்ட்ரோலர் மாஸ்டரி கிட் (தமிழ்நாடு)
பட்டியலிடப்பட்ட 10 சிறந்த அணிகள் மும்பையில் நடைபெறும் வேவ்ஸ் 2025-ன் போது ஒரு சிறப்பு கண்காட்சியில் தங்கள் யோசனைகளை முன்வைக்கும். சவாலில் வெற்றி பெற்றவர்கள் பிரமாண்டமான இறுதிப் போட்டியில் அமைச்சகத்தால் பாராட்டப்படுவார்கள்.
******
(Release ID: 2124722)
SMB/SG
Release ID:
(Release ID: 2125050)
| Visitor Counter:
10